ஈரோடு இடைத்தேர்தல் பணி; அலுவலர்களுக்கு சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு

Erode news, Erode news today- ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு, சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு செய்யும் பணியை, மாவட்ட தேர்தல் அலுவலர் கிருஷ்ணனுண்ணி துவக்கி வைத்தார்.

Update: 2023-02-03 06:30 GMT

Erode news, Erode news today- வாக்குச்சாவடியில் ஈடுபடுத்தப்படும் அலுவலர்களுக்கான முதல் நிலை பணி ஒதுக்கீட்டினை, கணினி மூலம் சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யும் பணியை, மாவட்ட தேர்தல் அலுவலர் கிருஷ்ணனுண்ணி தொடங்கி வைத்தார்.

Erode news, Erode news today- ஈரோடு மாவட்ட ஆட்சியரகத்தில், இன்று ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, வாக்குப்பதிவு நாளன்று 238 வாக்குச்சாவடி மையங்களில், 1,206 அலுவலர்கள் பணியாற்ற உள்ளனர். மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ஹெச்.கிருஷ்ணனுண்ணி, ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கான கணினி சுழற்சி முறையில், பணி ஒதுக்கீடு செய்யும் பணியினை துவங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட தேர்தல் அலுவலர் கிருஷ்ணனுண்ணி கூறியதாவது,

இந்திய தேர்தல் ஆணையத்தால் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஈரோடு மாவட்டத்தில், வரும்  27-ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து, ஈரோடு மாவட்டத்திற்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில், 238 வாக்குசாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், வாக்குச்சாவடி மையங்கள் அல்லாமல் 20 சதவீதம், அதாவது 48 வாக்குச்சாவடி கூடுதல் மையங்கள் (ரிசர்வ்) பகுதிகளாக என 286 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளது.

வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் நிறைவேற்றும் வகையில், அலுவலர்கள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் நாளான 27-ம் தேதியன்று பணியாற்ற ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் தலா ஒரு முதன்மை அலுவலர் மற்றும் மூன்று நிலைகளிலான வாக்குச்சாவடி அலுவலர்கள் என மொத்தம் 4 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள  ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் 238 வாக்குச்சாவடி மையங்களுக்கு 286 முதன்மை அலுவலர்களும், 858 மூன்று நிலைகளிலான வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் 1200 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளில் பணிபுரிய 62 அலுவலர்களுக்கும் கணினி மூலம், முதற்கட்ட சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பணியமர்த்தப்பட்ட அலுவலர்களுக்கு அவர்களது துறை சார்ந்த முதன்மை அலுவலர்கள் மூலம் வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரிவதற்கான ஆணைகளை வழங்குவார்கள். மேலும், முதன்மை அலுவலர் மற்றும் மூன்று நிலைகளிலான வாக்குச்சாவடி அலுவலர்கள் ஆகியோருக்கு வாக்குச்சாவடிகளில் பணியாற்றுவது குறித்து பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது எனத் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா, வட்டாட்சியர் (தேர்தல்) சிவகாமி, அலுவலக மேலாளர் (பொது) பூபதி, கணினி நிரலாளர் வெங்கடேஷ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில்குமார் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News