ஈரோடு டிவைன் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் டிவைன் எக்ஸ்போ - 2023
ஈரோடு டிவைன் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் டிவைன் எக்ஸ்போ 2023 என்ற மாணவர்களின் பள்ளிக் கண்காட்சி நடைபெற்றது.;
ஈரோடு டிவைன் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் டிவைன் எக்ஸ்போ 2023 என்ற மாணவர்களின் பள்ளிக் கண்காட்சி நடைபெற்றது.
ஈரோடு டிவைன் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் டிவைன் எக்ஸ்போ 2023 என்ற மாணவர்களின் பள்ளிக் கண்காட்சி சனிக்கிழமை (இன்று) நடைபெற்றது. நிகழ்ச்சியை பரஞ்ஜோதி யோகா கல்லூரியின் அறங்காவலரும், நட்சத்திரா கிரியேஷன்ஸ் உரிமையாளருமான மெய்ஞானச்செல்வர் ஸ்ரீஹரி துவக்கி வைத்தார். பள்ளியின் தாளாளர் ராஜகணபதி மற்றும் செயல் தலைவர் மெய் விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கண்காட்சியில், குழந்தைகளின் திறமைகளை கண்டு சிறப்பு விருந்தினர்கள் வியந்து பாராட்டினர். பள்ளி குழந்தைகள் குழு-1- மாசுபாடு, குழு-2- தாவர இராச்சியம், குழு-3- மனித உடல், குழு-4- சுகாதாரம் மற்றும் சுகாதாரம் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு நான்கு கருத்துக்களை கொண்டு இந்த கண்காட்சி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியானது இன்றைய வாழ்க்கை முறையில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய கருத்துகளைக் கொண்டவையாக இருந்தது.
வருகைப் புரிந்த அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கண்காட்சி அமைந்துள்ளது. மேலும், பள்ளி மாணவர்களின் திறமைகளை ஊக்குவிக்கும் வண்ணம் குழந்தைகளுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.