கோவை சரக டிஐஜி ஈரோட்டில் ஆய்வு

Coimbatore Freight DIG Inspection in Erode

Update: 2022-06-12 05:00 GMT

திறம்பட செயல்பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு பாராட்டு சான்றிதழை கோவை சரக டிஐஜி முத்துசாமி வழங்கினார். 

ஈரோடு மாவட்டத்தில் நிலுவையில் உள்ள குற்ற வழக்குகள் குறித்தும், கண்டறியப்பட்ட குற்ற வழக்குகளின் நிலை குறித்தும், கோவை சரக டிஐஜி முத்துசாமி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில்  ஆய்வு மேற்கொண்டு நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

இதனையடுத்து, பல்வேறு குற்ற வழக்குகளில் திறம்பட செயல்பட்டு குற்றவாளிகளை கண்டுபிடித்த, 97 போலீஸ் அதிகாரிகளுக்கு ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.தொடர்ந்து, 40 போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாரின் குறைகளை கேட்டு, உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்தார்.

நடப்பாண்டில் ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 201 குற்ற வழக்குகளில் 152 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு 183 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கஞ்சா விற்றதாக 103 வழக்குகளில், 159 பேரை கைது செய்து, 59 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. லாட்டரி விற்றதாக 48 வழக்குகளில், 84 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சூதாடியதாக, 285 பேர் மீது, 57 வழக்குகள் பதிவு செய்து, 89 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Tags:    

Similar News