பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,192 கன அடியாக அதிகரிப்பு

Erode news- ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கான நீர்வரத்து சனிக்கிழமை (மே.18) இன்று மாலை 4 மணி நிலவரப்படி வினாடிக்கு 927 கன அடியிலிருந்து 1,192 கன அடியாக அதிகரித்துள்ளது.

Update: 2024-05-18 12:15 GMT

Erode news- பவானிசாகர் அணை.

Erode news, Erode news today- பவானிசாகர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 927 கன அடியிலிருந்து 1,192 கன அடியாக அதிகரித்துள்ளது.

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டதாகும். இந்த அணையின் மூலம் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, காலிங்கராயன், கீழ்பவானி வாய்க்கால்கள் வழியாக சுமார் 2.50 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இந்நிலையில், அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக கோடை மழை பெய்ததால் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. சனிக்கிழமை (மே.18) இன்று நண்பகல் 12 மணி நிலவரப்படி வினாடிக்கு 927 கன அடியாக இருந்த நீர்வரத்து, மாலை 4 மணி நிலவரப்படி 1,192 கன அடியாக அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 5 கன அடி நீரும், பவானி ஆற்றில் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 200 கன அடி நீரும் என மொத்தம் வினாடிக்கு 205 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் இன்று நண்பகல் 44.50 அடியாக இருந்த நிலையில், இன்று மாலை 44.58 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் நீர் இருப்பு 3.26 டிஎம்சியாகவும் உள்ளது.

Tags:    

Similar News