ஈரோட்டில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் ஆலோசனைக் கூட்டம்
ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.;
ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்களுடன் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பது மற்றும் தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பான ஒருங்கிணைப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பது மற்றும் தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாக ஆலோசனை வழங்கப்பட்டது. தொடர்ந்து, வெள்ளம் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும், பவானி வட்டம், காடையாம்பட்டி கிராமத்தில் நாளை (31ம் தேதி) வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பது மற்றும் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளுவது தொடர்பாக ஒத்திகைப் பயிற்சி நடைபெற உள்ளது.
இதில், வருவாய்த்துறை, தீயணைப்புத்துறை, காவல்துறை, மருத்துவத்துறை, நீர்வளத்துறை, பவானி நகராட்சி, மின்சாரத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, கல்வித்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் மீன்வளத்துறை ஆகியோர் பங்கேற்று, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர்.
இக்கூட்டத்தில், மாவட்ட வன அலுவலர் குமிலி வெங்கட் அப்பால நாயுடு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முகம்மது குதுரத்துல்லா, பேரிடர் மேலாண்மை (தனி வட்டாட்சியர்) அங்கமுத்து, தேசிய பேரிடர் மீட்புக்குழு துணை காமண்ட் வைத்தியலிங்கம் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.