அந்தியூர் பகுதிகளில் பரவலாக மழை

அந்தியூர் பகுதியில் வியாழக்கிழமை பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீா் தேங்கி நின்றது.;

Update: 2023-12-01 01:30 GMT

அந்தியூர் - அத்தாணி சாலையில் தவிட்டுப்பாளையம் பிரிவு அருகே சாலையில் தேங்கிய மழைநீர்.

அந்தியூர் பகுதியில் வியாழக்கிழமை பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கி நின்றது. 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதையடுத்து பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அதன்படி, ஈரோடு மாவட்டத்திலும் சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. 

இதில், அந்தியூர் பகுதியில்  இன்று (வியாழக்கிழமை) காலை முதலே வானம் மந்தமாக காணப்பட்ட நிலையில், மாலை 3 மணியளவில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை சுமார் 1 மணி நேரம் வரை கொட்டி தீர்த்தது.

இதனால் இருசக்கர வாகனங்களிலும், நடந்தும் சென்றவர்கள் மழையில் நனைந்தனர். பலர் மழைக்கு ஆங்காங்கே ஒதுங்கினர். ஆனால் நீண்ட நேரமாக தூறிக்கொண்டே இருந்ததால், அவர்களும் நனைந்தபடியே புறப்பட்டு சென்றனர். இதன் காரணமாக அந்தியூர் பகுதியில் பல்வேறு இடங்களில் மழைநீர் குட்டைபோல் தேங்கி நின்றது. 

குறிப்பாக அந்தியூரில் இருந்து அத்தாணி செல்லும் சாலையில் தவிட்டுப்பாளையம் பிரிவு அருகே சாலையின் நடுவே மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. அதனால், சாலையில் வாகனங்கள் ஊர்ந்தபடி செல்ல வேண்டிய சூழல் உருவானது.

இதேபோல், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று பரவலாக மழை பெய்தது. சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கி தவிக்கும் ஈரோடு மக்களுக்கு இந்த இதமான காலநிலையால் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

Tags:    

Similar News