பெருந்துறை அருகே பட்டா மாறுதலுக்கு ரூ.2,500 லஞ்சம் வாங்கிய பெண் கிராம நிர்வாக அலுவலர் கைது

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே பட்டா மாறுதலுக்கு ரூ.2,500 லஞ்சம் வாங்கிய பெண் கிராம நிர்வாக அலுவலர் உதவியாளருடன் கைது செய்யப்பட்டார்.;

Update: 2025-02-07 00:00 GMT

லஞ்சம் (மாதிரிப் படம்).

பெருந்துறை அருகே பட்டா மாறுதலுக்கு ரூ.2,500 லஞ்சம் வாங்கிய பெண் கிராம நிர்வாக அலுவலர் உதவியாளருடன் கைது செய்யப்பட்டார்.

ஈரோடு மாவட்டம் நசியனூரை சேர்ந்தவர் ஜெயசுதா (வயது 48). இவர் பெருந்துறை அருகே உள்ள புங்கம்பாடியில் கிராம நிர்வாக அலுவலராக வேலை செய்து வந்தார். இவர் தனக்கு தனிப்பட்ட உதவியாளராக கருங்கல்பாளையத்தை சேர்ந்த பூபதி (வயது 40) என்பவரை நியமித்து இருந்தார்.

இந்த நிலையில், பெருந்துறையை சேர்ந்த மஞ்சுளா (வயது 48) என்பவர் பட்டா மாறுதல் செய்யக்கோரி ஆன்லைனில் விண்ணப்பித்து இருந்தார். இதுதொடர்பாக அவர் புங்கம்பாடி கிராம நிர்வாக அதிகாரி ஜெயசுதைாவ சந்தித்தார்.

அப்போது அவரிடம் பட்டா மாறுதல் செய்து கொடுக்க ரூ.2 ஆயிரத்து 500 லஞ்சம் கொடுக்க வேண்டும் என ஜெயசுதா கேட்டதாக தெரிகிறது. ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத மஞ்சுளா இதுகுறித்து ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.

இதைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேகா தலைமையிலான போலீசார், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை மஞ்சுளாவிடம் கொடுத்தனர். இதையடுத்து, நேற்று காலை அந்த பணத்தை புங்கம்பாடியில் கிராம நிர்வாக அலுவலர் ஜெயசுதாவை சந்தித்து மஞ்சுளா கொடுத்தார்.

பணத்தை ஜெயசுதா பெற்றுக்கொண்டதும், மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் விரைந்து சென்று கையும், களவுமாக அவரையும், அவருக்கு உடந்தையாக செயல்பட்ட பூபதியையும் கைது செய்தனர்.

மேலும், கிராம உதவியாளராக இருந்த கணவர் இறந்ததால் கருணை அடிப்படையில், ஜெயசுதாவுக்கு அரசு வேலை கிடைத்துள்ள நிலையில், தற்போது லஞ்சம் பெற்று கைதாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News