ஈரோடு மாவட்டத்தில் இன்று காலை 8.30 மணி வரை கடும் பனிமூட்டம்: வாகன ஓட்டிகள் அவதி

ஈரோடு மாவட்டத்தில் நிலவிய கடும் பனிமூட்டத்தால் இன்று (பிப்.7) காலை 8.30 மணி வரை வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.;

Update: 2025-02-07 04:45 GMT

ஈரோடு - சித்தோடு சாலையில் கடும் பனிமூட்டத்தால் புகைமண்டலமாக காணப்பட்ட சாலை.

ஈரோடு மாவட்டத்தில் நிலவிய கடும் பனிமூட்டத்தால் இன்று (பிப்.7) காலை 8.30 மணி வரை வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

ஈரோடு மாவட்டத்தில் இந்த ஆண்டு தொடக்கம் முதலே பனியின் தாக்கம் இருந்து வருகிறது. இதற்கிடையே, இன்று (பிப்ரவரி 7ம் தேதி) அதிகாலை முதலே பனியின் தாக்கம் அதிகமாக இருந்தது.

காலை 8.30 மணி வரை கடும் பனிப்பொழிவு காணப்பட்டதால் புகைமண்டலம் போல காட்சி அளித்தது. இதனால் காலையில் அருகே செல்பவர்கள் கூட தெரியவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டாறு மெதுவாக செல்வதை காண முடிந்தது.

குளிர்ந்த காற்றும் வீசியதால் கடும் குளிர் நிலவியது. இதனால் அதிகாலையில் எழுந்து வேலைக்கு செல்பவர்கள், வாகன ஓட்டிகள் மற்றும் நடைபயிற்சி செல்வோர் கடும் அவதி அடைந்தனர். இவர்களில் பெரும்பாலான நபர்கள் தலையில் குல்லா வைத்து கொண்டு செல்வதை பார்க்க முடிந்தது.

காலை 8.30 மணிக்கு பிறகே சூரியனின் கதிர்கள் பூமியில் விழ தொடங்கியது. அதற்கு பிறகே பனிமூட்டம் விலகியது.

Tags:    

Similar News