ஈரோட்டில் நெல் அரவை ஆலை உரிமையாளர்கள் கலந்தாய்வு கூட்டம்

ஈரோட்டில் நெல் அரவை ஆலை உரிமையாளர்கள் கலந்தாய்வு கூட்டம் புதன்கிழமை (இன்று) நடந்தது.;

Update: 2023-12-06 10:44 GMT

அரவை ஆலை உரிமையாளர்கள் கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது.

ஈரோட்டில் நெல் அரவை ஆலை உரிமையாளர்கள் கூட்டம் புதன்கிழமை (இன்று) நடந்தது.

ஈரோடு மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அரவை ஆலை உரிமையாளர்கள் கலந்தாய்வு கூட்டம் ஈரோடு ரோட்டரி சிடி கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, கோவை மண்டல குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் பாலாஜி தலைமை வகித்தார்.

ஈரோடு சரக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை காவல் துணைக்கண்காணிப்பாளர் சுரேஷ்குமார், காவல் ஆய்வாளர் பன்னீர்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், அரவை ஆலை சங்க தலைவர் விஸ்வநாதன், செயலாளர் சண்முகசுந்தரம் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரவை ஆலை உரிமையாளர்களும் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் அரவை ஆலையில் கண்காணிப்பு கேமரா கட்டாயம் பொருத்த வேண்டும். நெல், அரிசி மற்றும் மின்சார செலவிடுதல் பதிவேடுகளை முறையாக பராமரிக்கவும் அரசு ஒதுக்கிய நெல்லினை முறையாக பயன்படுத்த வேண்டும். அதில் எந்த விதமான முறைகேடுகளும் நடைபெறக் கூடாது‌. முறைகேடுகளில் ஈடுபடும் அரவை மில் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவுரை வழங்கப்பட்டது.

Tags:    

Similar News