விஜயமங்கலம் சோதனைச்சாவடி அருகே புகையிலை பொருட்களை கடத்திய 2 பேர் கைது

பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் சோதனைச்சாவடி அருகே ரூ.10 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை கடத்திய 2 பேர் கைதாகினர்.;

Update: 2023-12-06 13:30 GMT

கர்நாடகாவில் இருந்து கேரளாவுக்கு விற்பனைக்காக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ரூ 10 லட்சம் மதிப்புள்ள 3 டன் குட்கா விஜயமங்கலம் சோதனைச்சாவடியில் பெருந்துறை போலீசார் மடக்கி பிடித்தனர்.

பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் சோதனைச்சாவடி அருகே ரூ.10 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை கடத்திய 2 பேர் கைதானார்கள்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் சோதனைச்சாவடி வழியாக குட்கா கடத்தி செல்லப்படுவதாக பெருந்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, பெருந்துறை போலீசார் விஜயமங்கலம் சோதனை சாவடி அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த வாகனத்தை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா கடத்தி செல்லப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து வாகனத்தில் இருந்த கேரளாவைச் சேர்ந்த சுலைமான் மற்றும் சர்பூதீன் ஆகிய இருவரையும் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இதில், கர்நாடகவில் இருந்து கேரளாவிற்கு விற்பனைக்காக குட்காவை கடத்தி சென்றதை அவர்கள் ஒப்புக்கொண்டனர். மொத்தம் 3,000 கிலோ குட்கா அதாவது மூன்று டன் இருந்தது. இதன் மதிப்பு ரூ 10 லட்சம். இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து குட்கா மற்றும் வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News