ஈரோடு மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவில் 1,751 சிலைகள் பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி ஈரோடு மாவட்டத்தில் 1,751 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.

Update: 2024-09-07 01:25 GMT

பெருந்துறை பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள 9 அடி உயர விநாயகர் சிலையை படத்தில் காணலாம்.

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி ஈரோடு மாவட்டத்தில் 1,751 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி இன்று (செப்.7) சனிக்கிழமை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, இந்துக்கள் அமைப்பு மற்றும் பொதுமக்கள் சார்பில் பொது இடங்களில் மற்றும் வீடுகளில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்கின்றனர்.

இதையடுத்து, ஈரோடு மாவட்டத்தில் இந்து முன்னணி சார்பில் 1,008 இடங்களில் விநாயகர் சிலைகள் என மாவட்டத்தில் மொத்தம் 1,751 விநாயகர் சிலைகள் வைக்க போலீஸ் தரப்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின்பேரில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். ஏற்கனவே பிரச்சினை நடந்த பகுதியில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. அசம்பாவித சம்பவம் நடப்பதை தவிர்க்க போலீசார் சார்பில், மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போலீசார் கொடி அணிவகுப்பு நேற்று (செப்.6) நடைபெற்றது.


மேலும், விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள், நிபந்தனைகளை கடைபிடித்து அமைதியான முறையில் வழிபாடு நடத்த வேண்டும் என்றும், தங்களது நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் போலீசார் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் கோபிசெட்டிபாளையம், கவுந்தப்பாடி ஆகிய இடங்களில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் ஊர்வலமாக இன்று (சனிக்கிழமை) மாலை எடுத்துச் செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ள நீர்நிலைகளில் கரைக்கப்படுகின்றன.

இதேபோல், ஈரோட்டில் வருகிற 10ம் தேதி விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கரைக்கப்பட உள்ளது. மேலும், வருகிற 13ம் தேதி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படுகிறது.

Tags:    

Similar News