பெருந்துறை அருகே மனுநீதி நாள் முகாம் ரூ.4.22 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே நசியனூரில் கந்தாம்பாளையம் கிராமத்திற்கான மனுநீதி நாள் முகாமில் ரூ.4.22 லட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வழங்கினார்.
பெருந்துறை அருகே நசியனூரில் கந்தாம்பாளையம் கிராமத்திற்கான மனுநீதி நாள் முகாமில் ரூ.4.22 லட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வழங்கினார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம், காஞ்சிகோவில் உள்வட்டம், கந்தாம்பாளையம் கிராமத்திற்கான மனுநீதி நாள் முகாம் நசியனூர் அம்மன் திருமண மண்டபத்தில் இன்று (நவ.13) நடந்தது. இந்த முகாமிற்கு, மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமை தாங்கி, 70 பயனாளிகளுக்கு ரூ.4.22 லட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
முன்னதாக, தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை விளக்கிடும் வகையில் பொது சுகாதாரம் மற்றும் மருத்துவம், கால்நடைத் துறை, மகளிர் சுய உதவிக்குழு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் உள்ளிட்ட துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை அவர் பார்வையிட்டார்.
தொடர்ந்து, இம்முகாமில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இம்முகாமில் தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) செல்வராஜ், உதவி இயக்குநர் உமாசங்கர், துணை இயக்குநர் (வேளாண்மை) சாந்தாமணி, கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குநர் பழனிவேல், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) அருணா, திட்ட அலுவலர் (ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம்) பூங்கோதை, தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் முருகேசன், பெருந்துறை வட்டாட்சியர் செல்வகுமார் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.