அந்தியூர் அருகே மலைப்பாதையில் 108 ஆம்புலன்சில் பிறந்த இரட்டை குழந்தைகள்

Erode news- ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதியில் 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தது.;

Update: 2023-11-29 04:30 GMT
Erode news- ஆம்புலன்சில் பிறந்த இரட்டை குழந்தைகள். உடன், அவசர மருத்துவ உதவியாளர் வெங்கடேஷ் உள்ளார்.

Erode news, Erode news today- அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதியில் 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் தொள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சிக்கண்ணன் (வயது 29). இவரது மனைவி பார்வதி (வயது 28). இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இந்நிலையில் இவருக்கு நேற்று இரவு சுமார் 7 மணி அளவில் திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக அவரது கணவர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தார்.

உடனடியாக அங்கு வந்த 108 ஆம்புலன்ஸ் பார்வதியை ஏற்றிக்கொண்டு அந்தியூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது, தாமரை கரை வனச்சரக அலுவலகம் அருகே வந்த பொழுது பார்வதிக்கு திடீரென பிரசவ வலி அதிகமானதால் உடனே மலைப்பாதையில் சாலையில் ஓரத்தில் நிறுத்தி அவசர‌ மருத்துவ உதவியாளர் வெங்கடேஷ் மற்றும் ஓட்டுநர் சதீஷ்குமார் ஆகியோர் அப்பெண்ணுக்கு பிரசவம் பார்த்தனர்.

அப்போது அவருக்கு இரண்டு அழகான ஆண் குழந்தைகள் பிறந்தது. பின்னர் தாயையும் சேயும் மருத்துவ பரிசோதனைக்காக பர்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொண்டு வந்து சேர்த்தனர். இந்த தம்பதியினருக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. மலைப்பாதையில் 108 ஆம்புலன்சிலேயே பிரசவம் பார்த்த ஓட்டுநர் சதீஷ்குமார் மற்றும் அவசரகால மருத்துவ உதவியாளர் வெங்கடேஷ் ஆகியோருக்கு பொதுமக்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

Similar News