தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நிலையில் திடீர் பின்னடைவு

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டு இருப்பதாக மருத்துவமனை தெரிவித்து உள்ளது.

Update: 2023-11-29 11:08 GMT

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது .இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜயகாந்த் உடல்நிலை தொடர்பாக திடீர் வதந்தி பரவியது. அப்போது அவரது குடும்பத்தினர் விளக்கம் அளித்தனர். விஜயகாந்த் நல்ல நிலையில் இருப்பதாக கூறினார்கள்.

இந்நிலையில் இப்போது அவர் சிகிச்சை பெற்று வரும் சென்னை மியாட் மருத்துவமனை சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கடந்த 24 மணி நேரமாக அவருக்கு உடல்நிலை சீராக இல்லை. அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி  தேவைப்படுகிறது. இன்னும் 14 நாட்கள் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டியது உள்ளது. அவரது உடல்நிலையில் விரைவில் முன்னேற்றம் அடையும் என நம்புகிறோம் என கூறப்பட்டுள்ளது.

விஜயகாந்த் உடல் நிலையில் திடீரென ஏற்பட்டுள்ள இந்த பின்னடைவு  விஜயகாந்தின் ரசிகர்கள் மற்றும் தே.மு.தி.க. கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் தங்களது தலைவர் விரைவில் குணமடைந்து வர வேண்டும் என இறைவனை வேண்டுகிறார்கள். விஜயகாந்த் விரைவில் குணமடைய வேண்டி தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலையும் தனது எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டு உள்ளார்.

Tags:    

Similar News