திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
54 ஆண்டுகளுக்குப் பிறகு திண்டுக்கல் அபிராமி அம்மன் திருக்கோவிலில் தெப்ப திருவிழா நடக்கிறது.;
54 ஆண்டுகளுக்குப் பிறகு திண்டுக்கல் அபிராமி அம்மன் திருக்கோவிலில் தெப்ப திருவிழா நடக்கிறது.
இந்த தெப்பத்திருவிழா வரும் மே 22ஆம் தேதி (புதன்கிழமை) வைகாசி விசாகத்தன்று மலைக்கோட்டை அடிவாரத்தில் உள்ள கோட்டை குளத்தில் நடைபெறுகிறது. திண்டுக்கல்லில் பிரசித்தி பெற்ற கோவில்களில் திண்டுக்கல் அபிராமி அம்மன் திருக்கோவிலும் ஒன்றாகும். வரலாற்று சிறப்புமிக்க இந்த திருக்கோவிலில் பண்டைக்காலத்தில் தெப்ப திருவிழா சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது.
அன்னியர் படையெடுப்பு உள்ளிட்ட காரணங்களால் தெப்பத் திருவிழா நடைபெறுவது தடைபட்டுள்ளது. இதற்கிடையே கடந்த 1970 ஆம் ஆண்டு தெப்ப திருவிழாவை நடத்தியுள்ளனர் அதன்பிறகு தெப்பத் திருவிழா நடைபெறவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு தெப்ப திருவிழாவை நடத்த கோவில் அறங்காவலர்கள் குழு முடிவு செய்து அதற்கான ஒப்புதலை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையரிடம் பெற்றுள்ளனர்.
அதன்படி வருகிற 22ஆம் தேதி புதன்கிழமை மாலை மலைக்கோட்டை அடிவாரத்தில் உள்ள கோட்டை குளத்தில் தெப்பத் திருவிழா நடைபெறுகிறது. 54 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு நடைபெற உள்ள தெப்பத் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர். கோயில்கள் நிறைந்த திண்டுக்கல் மாநகரமும் ஒரு முக்கியமான ஆன்மீக நகரமாகும். இங்குள்ள கோட்டை மாரியம்மன், சவுந்திரராஜபெருமாள் கோயில், மலைக்கோட்டை, 1008 விநாயகர் கோயில்களும் இங்கு நடைபெறும் திருவிழாக்களும் மிகவும் பிரசித்தி பெற்றவை.
இந்த நிலையில் திண்டுக்கல் அபிராமி அம்மன் என்படும் ஞானம்மன், காளாத்தீஸ்வரர் கோயில் தெப்பத்திருவிழாவும் நடைபெறுவதால், இந்த திண்டுக்கல் நகரமே விழாக்கோலம் பூண்டு வருகிறது.