தர்மபுரி மாவட்டத்தில் இன்று 122 பேருக்கு கொரோனா

தர்மபுரி மாவட்டத்தில் இன்று 122 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

Update: 2021-06-19 18:15 GMT

பைல் படம்

தர்மபுரி மாவட்டத்தில் 122 பேருக்கு இன்று கொரோனோ தொற்று ஏற்பட்டு உள்ளது. இதுவரை 23 ஆயிரத்து 294 பேர் பாதிக்கப்பட்டு இதில் 21 ஆயிரத்து 662 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

இன்று மட்டும் 292பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 1446 பேர் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்

இன்று கொரோனாவால் 2 பேர் உயிரிழந்துள்ளனர் மாவட்டத்தில் மொத்தம் 186பேர் கொரோனோவால் உயிரிழந்து உள்ளனர்.

Tags:    

Similar News