நல்லம்பள்ளி அருகே டூவீலர் மோதி விபத்தில் இருவர் சாவு: ஒருவர் கவலைக்கிடம்

நல்லம்பள்ளி அருகே பாளையம்புதூரில் டூவீலர் மீது பிக்கப் வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் சம்பவ இடத்திலேயே சாவு; ஒருவர் கவலைக்கிடமாக உள்ளார்.

Update: 2022-01-15 03:20 GMT
நல்லம்பள்ளி அருகே பாளையம் புதூரில் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சர்மிளா பானு பேச்சுவார்த்தை நடத்தினார்.

தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்துள்ள பாளையம் புதூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் பெருமாள் சாமி 29, திருஞணம்,26 பூபேஸ் 30,இவர்கள் 3 பேரும் இரு சக்கர வாகனத்தில் இன்று பிற்பகல் சனிசந்தை பகுதியில் இருந்து பாளையம்புதூரை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

அப்போது பாளையம்புதூர் 4ரோடு பகுதியை கடக்க முயற்சி செய்தபோது, சேலத்தை நோக்கி சென்றுகொண்டிருந்த பிக்கப் வேன் வேகமாக டூவீலர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பேரும் தூக்கி வீசப்பட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே பெருமாள்சாமி உயிரிழந்தார். மற்ற இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி திருஞானம் உயிரிழந்தார். பூபேஸ் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்தினால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் தர்மபுரி -சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த தர்மபுரி காவல் துணை கண்காணிப்பாளர் வினோத், தொப்பூர் இன்ஸ்பெக்டர் சர்மிளா பானு, நல்லம்பள்ளி தாசில்தார் செந்தில் ஆகியோர் பொதுமக்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பொதுமக்கள் சனி சந்தையிலுள்ள அரசு மதுபானக் கடையை மூட வேண்டும். 4 ரோடு பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். உங்கள் கோரிக்கைகள் மாவட்ட நிர்வாகத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த பின்பு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இந்த விபத்தினால் தர்மபுரி சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவுக்கு மேல் நின்றதினால்,ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News