மத்திய நிதி திட்டத்தில் பயன்பெற பழங்குடியினர் விண்ணப்பிக்கலாம்

தர்மபுரி மாவட்டத்தில், மத்திய நிதி திட்டத்தின் கீழ்பயன் பெற பழங்குடியினர் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்.

Update: 2021-09-15 14:00 GMT

மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்சினி 

தர்மபுரி மாவட்டத்தில்,  பழங்குடியினர் நலத்துறை மூலம், மத்திய அரசின் சிறப்பு நிதி உதவித் திட்டம்,  அழிவின் விளிம்பில் உள்ள பழங்குடியின மேம்பாட்டு திட்டம் மற்றும் விரிவான பழங்குடியினர் நல மேம்பாட்டு திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் பயன்பெற தருமபுரி மாவட்ட பழங்குடியினர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுவதாக, மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்சினி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து,  மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்சினி வெளியிட்டுள்ள அறிக்கை: பழங்குடியினர் நலத்துறை மூலம் தர்மபுரி மாவட்டத்திற்கு 2019-2020 மற்றும் 2020-2021-ஆம் ஆண்டிற்கு பழங்குடியினர் துணைத் திட்டத்தின் கீழ் மைய அரசின் சிறப்பு நிதி உதவித் திட்டம் அழிவின் விளிம்பில் உள்ள பழங்குடியின மேம்பாட்டு திட்டம் மற்றும் விரிவான பழங்குடியினர் நல மேம்பாட்டு திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தும் வகையில் கீழ் கீழ்கண்டவாறு திட்டங்களை செயல்படுத்திட ரூ. 72.325 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்து வரப்பெற்றுள்ளது.

கறவை மாடு (இருளர்),  கறவைமாடு (மலையாளி), சூரிய சக்தியில் இயங்கும் பம்பு, தையல் இயந்திரம், கேட்டரிங், ஓட்டுநர், தையல், மருத்துவம் சார்ந்த செவிலியர், எலக்ட்ரீஷின் போன்ற பயிற்சி, செம்மறி ஆடு வளர்ப்பு ஆகியவற்றுக்கு, தகுதியுள்ள பழங்குடியின பயனாளிகள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:  திட்ட அலுவலர், மாவட்ட பழங்குடியினர் நலம், கூடுதல் கட்டிடம், மாவட்ட ஆட்சியரகம்,தர்மபுரி. விண்ணப்பம் வந்து சேரவேண்டிய நாள்: 30.09.2021 தேதி மாலை 5.00 மணி வரை விண்ணப்பங்கள் பெறப்படும்.
விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய சான்றுகள்: 1. உரிய திட்டத்திற்கான விண்ணப்பம், 2.புகைப்படம் இரண்டு, 3. சாதிச்சான்று நகல், 4. ஆதார் அட்டை நகல், 5. இருப்பிட சான்றின் நகல், 6. பள்ளி மாற்று சான்றிதழ், 7.மதிப்பெண் சான்றிதழ், 8.வருமானச் சான்று என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News