பெண்களே உஷார்... போலீசின் எச்சரிக்கைக்கு காரணம் இதுதான்!

மலைப்பகுதி, பள்ளத்தாக்கு பகுதி, காட்டுக்கொட்டாய் பகுதிகளில் தனியாக இருக்கும் பெண்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

Update: 2021-04-30 04:44 GMT

தருமபுரி மாவட்டம், தொப்பூர் காவல்துறையினர், முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடப்பட்டுள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:

அறிமுகம் இல்லாத நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து, தனியாக ஆடு, மாடு மேய்க்கும் பெண்களை கைக்கால்களை கட்டிப்போட்டு நகைகள், பணம், கொலுசு பறித்து செல்கின்றனர். அவர்கள் இருசக்கர வாகனத்தில் வருகின்றனர். எனவே, விழிப்பாக இருக்க வேண்டும்.

தனியாக உள்ள வீடுகளில் இரவு நேரங்களில் வெளியில் படுத்து தூங்க வேண்டாம். குடிக்க தண்ணீர் கேட்டும், ஊருக்கு போக வழிக்கேட்டும், தெரியாத நபர்களை விசாரிப்பது போல் பேச்சு கொடுத்து, தனியாக இருக்கும் பெண்களிடம் இருசக்கர வண்டியில் வந்து நகை, பணம் ஆகியவற்றை பறித்து செல்கின்றனர்.

குறிப்பாக மலைப்பகுதி, பள்ளத்தாக்கு பகுதி, காட்டுக்கொட்டாய் ஆகிய பகுதிகளில் தனியாக ஆடு, மாடு மேய்க்கும் பெண்கள் மற்றும் வயதான பெண்களை குறிவைத்து நகைகள் மற்றும் பணத்தை பறித்து செல்கின்றனர். குறிப்பாக மலைப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் இவர்களின் நடமாட்டம் இருக்கின்றது.

எனவே மலை கிராமங்களில் ஆடு, மாடு மேய்க்கும் நபர்கள் தனியாக யாரும் செல்ல வேண்டாம் என காவல்துறையின் மூலமாக அறிவுறுத்தப்படுகிறது.

அடையாளம் தெரியாத சந்தேகமான முறையில் யார் ஊருக்குள் வந்தாலும் காவல்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.

தொடர்பு கொள்ள வேண்டிய தொலைப்பேசி எண்கள்

காவல் நிலையம்: 94981 01080

காவல் உதவி ஆய்வாளர்: 94981 69595

காவல் உதவி ஆய்வாளர்: 94981 68040

மேற்கண்ட எண்ணில் தொடர்பு கொண்டு, புகார்களை தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News