தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் கட்டணம் செலுத்தமுடியாமல் தவிக்கும் மாணவி

பல் மருத்துவப்படிப்பிற்க்கு தனியார் கல்லூரியில் இடம் கிடைத்தும் கட்டணம் செலுத்தமுடியாமல் மாணவி ஒருவர் தவித்து வருகிறார்.

Update: 2022-02-15 08:15 GMT

தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் தனது தாயாருடன் மனு அளிக்க வந்த திவ்யதர்ஷினி.

தனியார் மருத்துவக் கல்லூரியில் பிடிஎஸ் படிப்பிற்கு இடம் கிடைத்தும் கல்லூரி கட்டணம் செலுத்த முடியாததால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், தர்மபுரி மாவட்டம், மொரப்பூரை அடுத்த மோட்டூர் கிராமத்தை சேர்ந்த திவ்யதர்ஷினி தனது தாயாருடன் வந்து மனு அளித்தார்.

அந்த மனுவில் பன்னிரண்டாம் வகுப்பு வரை தனியார் பள்ளியில் படித்து வந்ததாகவும் மூன்றாவது முறை நீட் தேர்வு எழுதியதில் 427 (எம்பிசி( வி)) மதிப்பெண்கள் எடுத்து குமாரபாளையத்தில் உள்ள தனியார் பல் மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது.

வருடத்திற்கு ரூபாய் 4 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் செலுத்தி படிக்க வசதியில்லை. எனவே அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு கட்டணத்தை தமிழக அரசே ஏற்றுக்கொண்டது போல தனக்கும் தன்னை போன்றவர்களுக்கும் வழிவகை செய்ய வேண்டும். அல்லது வங்கியில் கல்வி கடன் ஏற்பாடு செய்து தரும்படி அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News