தருமபுரியில் மாணவ, மாணவியர்களின் மினி மாரத்தான் ஓட்டப் போட்டி

தருமபுரியில் 75-வது சுதந்திர தின விழாவையொட்டி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களின் மினி மாரத்தான் ஓட்டப் போட்டி நடைபெற்றது.

Update: 2022-03-29 05:15 GMT

தர்மபுரியில் மினி மாரத்தான் போட்டியை சார் ஆட்சியர் சித்ரா விஜயன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 75-வது சுதந்திர தின விழா "சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவை" முன்னிட்டு  மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறை இணைந்து நடத்திய மினி மாரத்தான் ஓட்டப் போட்டியை தருமபுரி சார் ஆட்சியர் சித்ரா விஜயன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கிய மினி மாரத்தான் ஓட்டப்போட்டி, தருமபுரி சாலை, செந்தில் நகர், இலக்கியம்பட்டி, பாரதிபுரம், அரசு தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, நெசவாளர் காலனி சாலை வழியாக தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நிறைவடைந்தது.

இந்த போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்கள், மாணவிகளுக்கு பரிசும், பாராட்டு சான்றும் வழங்கப்படவுள்ளது. தொடர்ந்து மினி மாரத்தான் போட்டியில் கலந்து கொண்ட, அனைத்து மாணவர்களுக்கு, பிளாஸ்டிக்கை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, சுற்று சூழல் துறை சார்பில் தமிழ்நாடு அரசின் மீண்டும் மஞ்சப்பை திட்டத்தில், மஞ்சப்பை வழங்கப்பட்டது. இந்த மினி மாரத்தான் போட்டியில் தருமபுரி விளையாட்டு விடுதி மாணவியர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் என 150-க்கும் மேற்பட்ட கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் டாக்டர் சாமுவேல் ராஜ்குமார், மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அலுவலர் தே. சாந்தி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மு. அண்ணாதுரை, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ஜெ. முத்துக்குமார் உட்பட பள்ளி, கல்லூரி விளையாட்டு ஆசிரியர், ஆசிரியைகளும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News