தர்மபுரியில் அரசு போக்குவரத்து கழக ஏஐடியூசி தொழிற்சங்கத்தினர் ஆர்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஏஐடியூசி தொழிற்சங்கத்தின் சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது.

Update: 2021-12-21 10:15 GMT

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தருமபுரி மாவட்ட ஏஐடியூசி தொழிற்சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாதிபுரம் மண்டல போக்குவரத்து அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் நடைபெற்றது

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தருமபுரி மாவட்ட ஏஐடியூசி தொழிற்சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாதிபுரம் மண்டல போக்குவரத்து அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் நடைபெற்றது.

ஆர்பாட்டத்திற்கு இச்சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் கே.துரைசாமி தலைமை வகித்தார்.நிர்வாகி எம்.முனுசாமி முன்னிலை வகித்தார்.ஏஐடியூசி மாவட்ட பொது செயலாளர் கே.மணி கோரிக்கைகளை விளக்கி பேசினார்.மத்திய சங்க நிர்வாகிகள் கோவிந்தசாமி,பூபேஷ்குப்தா,கணேசன்,ஏஐடியூசி மாவட்ட துணை தலைவர் ஆர்.சுதர்சனன், உள்ளாட்சி சம்மேளன மாவட்டத் தலைவர் மனோகரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

ஆர்பாட்டத்தில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை உடனடியாக உருவாக்க வேண்டும்.அரசு மற்றும் மின்வாரிய ஊழியர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும்.போக்குவரத்து கழகங்களுக்கு ஏற்படும் நிதி பற்றாக்குறையை தமிழ்நாடு அரசு உடனடியாக வழங்க வேண்டும். பணியில் இருக்கும் தொழிலாளர்களுக்கு மத்திய அரசு அறிவித்துள்ள பஞ்சப்படி உயர்வை நிலுவையுடன் வழங்க வேண்டும்.ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு 6 வருடங்களாக வழங்காமல் உள்ள பஞ்சப்படி உயர்வை நிலுவையுடன் வழங்க வேண்டும்.வாரிசுகளுக்கு பணி வழங்க வேண்டும்.காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.

பாகுபாடில்லாமல் அனைவருக்கும் பணி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.விடுமுறை வழங்க வேண்டும்.சம்பவத்தின் தன்மைக்கு மாறாக தொழிலாளர்களுக்கு வழங்கும் தண்டனையை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

இறுதியில் மண்டல பொருளாளர் நாராயணன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News