தொப்பூர் கணவாய் பகுதியில் தொடர் விபத்து: போக்குவரத்து ஆணையர் நடராஜன் ஆய்வு

தொப்பூர் கணவாய் பகுதியில் சாலைவிபத்துகளை தடுப்பது குறித்து போக்குவரத்து ஆணையர் நடராஜன் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2021-12-02 16:15 GMT

தொப்பூர் கணவாய் பகுதியில் சாலை விபத்துகளை தடுப்பது குறித்து ஆய்வு மேற்கொண்ட போக்குவரத்து ஆணையர் நடராஜன்.

தர்மபுரி மாவட்டம், தொப்பூர் கணவாய் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்படும் சாலை விபத்துகளை தடுப்பது குறித்து போக்குவரத்து ஆணையர், சாலைபாதுகாப்பு ஆணையர் நடராஜன் மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்க்கொண்டார்.

இதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சாலைபாதுகாப்பு மற்றும் விபத்துகளை தடுப்பது குறித்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர், தர்மபுரி சேலம் இடைப்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் 6 கிலோ மீட்டர் தூரத்திற்க்கு தொப்பூர் மலைப்பாதை உள்ளது. இதில் கட்டமேடு முதல் காவல் சோதனை சாவடி வரை 3 கிலோமீட்டர் சாலை மிகவும் சரிவாகவும், வளைவாகவும் இருப்பதால் இங்கு அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது.

இப்பகுதியில் ஏற்படுகிற விபத்துகளை தடுக்கும் வகையில் சாலையில் வரிபள்ளங்களும், ஒளி பிளிங்கர்ஸ், இரவு நேரங்களில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் பொன்றவற்றை பொறுத்தவேண்டும். 30 கிலோ மீட்டர் வேத்தில் வாகனத்தை இயக்கவேண்டும். 2 வது கியரில் மட்டுமே வாகனத்தை இயக்கவேண்டும் என்பதை டிரைவர்கள் அறிந்துகொள்ளும் வகையில் அறிவிப்பு பலகைகளை பொறுத்தவேண்டும்.

இந்த பகுதியில் விபத்து ஏற்ப்பட்டால் உடனடியாக மீட்கும் வகையில் 40 மெட்ரிக்டன் எடை கொண்ட கிரேன் அப்பகுதியில் தயார்நிலையில் வைத்திருக்கவேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் 950 விபத்துகள் ஏற்பட்டுள்ளது. இதில் 223 நபர்கள் உயிரிழந்துள்ளனர். போதிய வெளிச்சம் இல்லாததால் விபத்துகள் நடைபெறுவது கண்டறியப்பட்டு 100 சோலார் விளக்குகள் 2 உயர்கோபுர மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தர்மபுரி சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமான சென்ற வாகனங்களுக்கு அபராதம் விதித்த வகையில் கடந்த 5 மாதங்களில் 4472 வழக்குகள் பதியப்பட்டு ரூபாய் 23.94 இலட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரவித்துள்ளனர். இவ்வாறு போக்குவரத்து ஆணையர் தெரிவித்துள்ளார். சாலையில் பயணிக்கும் வாகனஓட்டிகள் அறிந்துகொள்ளும் வகையில் அருகில் உள்ள மருத்துவனைகளின் விபரங்கள் மற்றும் தொலைபேசி எண்களுடன் கூடிய அறிவிப்பு பலகைகளை பொருத்த உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு போக்குவரத்து ஆணையர் நடராஜன் தெரிவித்தார்.

இந்த ஆய்வு மற்றும் ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி, எஸ் பி. கலைச்செல்வன், சப்கலெக்டர் சித்ரா விஜயன், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட இயக்குனர் குலோத்துங்கன், போக்குவரத்து துறை சேலம் சரக துணை ஆணையர் பிரபாகரன், வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன், நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் தனசேகரன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News