அரசு விழாவில் பார்வையாளர் இடத்தில் எம்எல்ஏக்களுக்கு இருக்கை: தர்மபுரியில் பரபரப்பு

தர்மபுரி அரசு விழாவில் எம்எல்ஏக்களுக்கு மரியாதை கொடுக்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.

Update: 2021-11-18 04:30 GMT

பார்வையாளர்கள் வரிசையில் இருக்கை ஒதுக்கியது குறித்து கேள்வி எழுப்பிய சட்டமன்ற உறுப்பினர்கள்.

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் நேற்று தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தலைமையில் பொதுமக்கள் விவசாயிகள், அரசு அலுவலர்கள் உடனான ஆய்வு மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது .

இந்த கூட்டத்தில் கழக பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, அரூர் சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பத்குமார், பென்னாகரம் பா.ம.க சட்டமன்ற உறுப்பினரும் பாமக தலைவர் ஜி.கே.மணி, தர்மபுரி பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன் உள்ளிட்டோருக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு அனைவரும் ஆய்வு கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொடுக்க வேண்டிய விதிமுறைகள் பின் பற்றி உரிய மரியாதையை தராமல் பார்வையாளர்கள் வரிசையில், அதிகாரிகள் வரிசையில் அவர்களுக்கு இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும், பாமக சட்ட மன்ற உறுப்பினரும் மாவட்ட ஆட்சியரிடம், தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்த அமைச்சர்கள் இந்த ஆய்வுக் கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் என்ற புரோட்டாகால் கடைப்பிடிக்கப்படவில்லை. மக்கள் பிரதிநிதிகளான எங்களுக்கு இந்த நிலை. மக்கள் பிரச்சினைகளுக்காக தரையில் அமர்ந்து கூட பேச தயாராக உள்ளோம் என தெரிவித்தனர். இதனையடுத்து அமைச்சர் ராமச்சந்திரன் முன்னிலையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இதில் மாவட்ட ஆட்சியர் நேரிடையாக அவரது இருக்கையில் இருந்து கீழே இறங்கி வந்து சட்டமன்ற உறுப்பினர்களிடம், அவர்களை மேலே வருமாறு கேட்டுக் கொண்டார். உடனடியாக அவசர அவசரமாக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இருக்கைகள் போடப்பட்டது.

இதையடுத்து சட்டமன்ற உறுப்பினர்கள் நான்கு பேரும் ஸ்டேஜில் அமைக்கப்பட்ட இருக்கையில் சென்று அமர்ந்தனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அரங்கத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News