தருமபுரி: நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலையோரங்களில் பூங்கா அமைப்பு

தருமபுரியில், நெடுஞ்சாலைத்துறை சார்பில், சாலையோர பூங்காக்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Update: 2021-10-08 04:45 GMT

அதியமான்கோட்டையில், நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலையோர பூங்கா அமைக்கும் பணி நடைபெற்றது.

தர்மபுரி நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு சார்பில்,  சுற்றுப்புற சூழல் மற்றும் வடகிழக்கு பருவமழை கருத்தில் கொண்டு, சாலையோர பூங்காக்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக,  பழைய தேசிய நெடுஞ்சாலை அதியமான்கோட்டை ரெயில்வே மேம்பாலம் அருகே,  சாலையோர பூங்கா அமைக்கும் பணி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில்,  கோட்டப் பொறியாளர் தனசேகரன்,  முதலாவது மரக்கன்றினை நட்டு வைத்தார். தொடர்ந்து உதவி கோட்டப் பொறியாளர் ஜெய்சங்கர், உதவிப் பொறியாளர் கிருபாகரன் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். இப்பணிகளை சாலை ஆய்வாளர்கள் அபிமன்னன், ரகமத்துல்லா, சரவணன் ஆகியோர் மேற்பார்வையில்,  சாலைப் பணியாளர்கள் தொடர்ந்து 100-க்கும் மேற்பட்ட செடிகளை நட்டனர். இதே போன்று சாலையோரம் ஆங்காங்கே 1000-க்கும் மேற்பட்ட செடிகள் நட்டு பூங்காக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News