அரசு அலுவலகங்களிலும் பாரதியாரின் உருவ படம்: தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் தீர்மானம்

அனைத்து அரசு அலுவலகங்களிலும் பாரதியாரின் உருவ படத்தை வைக்க வேண்டும் என தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் தீர்மானம் நிறைவேற்றம்

Update: 2021-09-27 04:00 GMT

தர்மபுரியில் நடைபெற்ற தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் ஆலோசனை கூட்டம் தர்மபுரியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் நடிகர் சிங்காரவேலன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் சின்னகண்ணன் தீர்மானங்கள் குறித்து விளக்கி பேசினார்.பாரதியார் நூற்றாண்டு விழா கொண்டாடுவது குறித்து முன்னாள் மாநில செயலாளர் கவிஞர் ரவீந்திரபாரதி பேசினார்.

கூட்டத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக அறிவித்து நடைமுறைக்கு கொண்டு வந்த தமிழக அரசை தமிழ்நாடு   பாராட்டி வரவேற்கிறது. அனைத்து பள்ளி,கல்லூரிகளில் பாரதி நூற்றாண்டு விழா நடத்த முயற்சிகள் மேற்கொள்வது, அனைத்து அரசு அலுவலகம்,பள்ளி மற்றும் கல்லூரிகளில் பாரதியாரின் உருவ படத்தை வைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தர்மபுரி, அரூர், பாப்பாரப்பட்டி ஆகிய 3 மையங்களில் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் சார்பில் பாரதியின் நூற்றாண்டு விழா சிறப்பாக நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் கே.மணி,மாவட்டக்குழு உறுப்பினர் வணங்காமுடி, ஓய்வு பெற்ற தாசில்தார் பிரபாகரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News