தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு

தருமபுரி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2021-08-19 09:15 GMT

நல்லிணக்க உறுதிமொழி ஏற்ற மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்பி அலுவலக அதிகாரிகள், ஊழியர்கள்.  

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திவ்யதர்சினி, தலைமையில் நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி இன்று (19.08.2021) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் நல்லிணக்க நாள் உறுதிமொழியான 'நான் சாதி, இன, வட்டார, மத அல்லது மொழி பாகுபாடு எதுவுமின்றி, இந்தியாவின் அனைத்து மக்களின் உணர்வு பூர்வ ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்கும் பாடுபடுவேன் என்று உளமார உறுதிமொழி எடுத்துக்கொள்கிறேன். மேலும், எங்களுக்கிடையேயான அனைத்து வேறுபாடுகளையும், வன்முறையில் ஈடுபடாமல், பேச்சுவார்த்தைகள் மூலமாகவும் அரசியலமைப்புச் சட்ட வழிமுறைகளைப் பின்பற்றியும் தீர்த்துக் கொள்வேன் என்றும் இதனால் உறுதி அளிக்கிறேன்" என்ற நல்லிணக்க நாள் உறுதிமொழியினை வாசிக்க அனைத்து அரசு அலுவலர்களும் பின் தொடர்ந்து வாசித்து உறுதிமொழியினை ஏற்றுகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சு.அனிதா, உதவி ஆட்சியர் பயிற்ச்சி கௌரவ் குமார் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) நாராயணன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சாந்தி, மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) நசீர் இக்பால், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சீனிவசசேகர், மாவட்ட கருவுல அலுவலர் சுப்பிரமணி உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோன்று நல்லிணக்க உறுதிமொழி தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் அவர்கள் உறுதிமொழி வாசிக்க அவரை தொடர்ந்து காவல் கூடுதல் கண்காணிப்பாளர் அண்ணாமலை காவல்துணை கண்காணிப்பாளர் ஸ்ரீதர் அவர்கள் மற்றும் அமைச்சு பணியாளர்கள் காவலர்கள் கலந்து கொண்டனர்


Tags:    

Similar News