தர்மபுரி மாவட்டத்தில் பரவலாக மழை: சராசரி 69.6 மி.மீ. மழை பதிவு

தர்மபுரி மாவட்டத்தில் சராசரி 69.6 மி.மீ மழை பதிவாகி உள்ளதாக, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Update: 2022-05-04 04:45 GMT

தர்மபுரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கடும் வெப்பம் நிலவி வருகிறது.  இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில், கடந்த இரு தினங்களாக மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று மாலை முதல் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

தர்மபுரி மாவட்டத்தில் இன்று காலை நிலவரப்படி,   பாலக்கோட்டில் 4.6 மி.மீ.,  மாரண்டஹள்ளி 21 மி.மீ, பென்னாகரம் 29 மி.மீ,மழை பதிவாகியுள்ளது. ஒகேனக்கல் 10 மி.மீட்டரும், பாப்பிரெட்டிப்பட்டி 5 மி.மீ மழை பதிவாகி உள்ளது. மொத்தம் 69.6 மி.மீட்டர் மழை பெய்து உள்ளது. மாவட்டத்தின் மொத்த சராசரி 9.94 மி.மீட்டர் ஆகும்.

Tags:    

Similar News