தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: 1144 நபர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கல்

தர்மபுரியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 1144 நபர்களுக்கு பணி நியமன ஆணையை கலெக்டர் திவ்யதர்சினி வழங்கினார்.

Update: 2021-11-13 16:00 GMT

பணி நியமன ஆணையை வழங்கும் கலெக்டர். 

தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக/ நகர்புற வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) இணைந்து நடத்திய மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மற்றும் வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் தர்மபுரி அரசு கலைக் கல்லூரியில் இன்று (13.11.2021) நடைபெற்றது.

இம்முகாமிற்கு தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டி.என்.வி.எஸ்.செந்தில்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜி.கே.மணி (பென்னாகரம்), ஆ.கோவிந்தசாமி (பாப்பிரெட்டிப்பட்டி), வே.சம்பத்குமார் (அரூர்), எஸ்.பி.வெங்கடேஸ்வரன் (தருமபுரி) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு பெற்ற நபர்களுக்கு பணி நியமன ஆணைகளையும், வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமில் பயிற்சி  முடித்தவர்களுக்கு சன்றிதழ்களையும் வழங்கி பேசும் போது தெரிவித்தாவது:

தமிழ்நாடு அரசு தமிழக மக்களின் வாழ்க்கை தரம் உயர்வதற்காக பொருளாதார மேம்பாட்டிற்காகவும் பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகின்றது. அந்த வகையில், இளைஞர்களின் எதிர்காலத்தினை கருத்தில் கொண்டு அவர்களுக்கு பல்வேறு வாய்ப்புகளை ஏற்படுத்தி தருகின்றது. படித்து வேலை தேடும் இளைஞர்களுக்கு தனியார் துறைகளில் பணியமர்த்தம் செய்யும் நோக்கத்தோடு தமிழ்நாடு அரசு சார்பில் இளைஞர்களுக்கு பல்வேறு பயிற்சி திட்ட முகாம்களும், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் அரசு துறையின் மூலம் வெளியிடப்படும் போட்டித்தேர்வுகளுக்கு இளைஞர்களுக்கு முறையான வகுப்புகளும் இலவசமாக நடத்தி வருகின்றது.

அதுமட்டுமின்றி, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் தமிழக அரசால் அவர்களின் கல்வித்தகுதிக்கு ஏற்றாற்போல் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. தர்மபுரி மாவட்டத்தில் பெரும்பாலும் சாதாரண மக்களும், விவசாய குடும்பத்தினை சார்ந்தவர்களாக உள்ளனார். இவர்களின் குழந்தைகள் கல்வி கற்க அரசு ஏராளமான வாய்ப்புகளை எற்படுத்தி கொடுத்து வருகின்றது. அவ்வாறு படித்து வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கக் கூடிய இளைஞர்களுக்கு பல வாய்ப்புகளை ஏற்படுத்தி தருகின்ற வகையில், இன்றைய தினம், மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மற்றும் வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெறுகின்றது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் ஒரே இடத்தில் Toyota, TVS, Tata Electricals, Bosh உள்ளிட்ட 102-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்று சுமார் 12,000-த்திற்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு நேர்காணல் முலம் பணியாளர்களை தேர்வு செய்யும் பணிகளை மேற்கொண்டன. இவ்வாறு தெரிவித்தார்.

Tags:    

Similar News