படத் திறப்பு நிகழ்ச்சி: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் பங்கேற்பு

மறைந்த தருமபுரி மாவட்ட ஏஐடியூசி சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் ராமன் படத்தை கம்யூ., கட்சி மாநில செயலாளர் முத்தரசன் திறந்து வைத்தார்.

Update: 2022-02-07 05:00 GMT

படத்தை திறந்து வைத்த முத்தரசன்.

தருமபுரி மாவட்ட ஏஐடியூசி கட்டட தொழிலாளர் சங்கத்தின் மாவட்டக்குழு கூட்டம் தருமபுரியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் குழந்தைவேலு தலைமை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் கூட்டத்தில் கலந்து கொண்டு தருமபுரி மாவட்ட ஏஐடியூசி கட்டட தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவராகவும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பாலக்கோடு வட்டாரக்குழு உறுப்பினராகவும் பணியாற்றி வந்த ராமன் மறைவை ஒட்டி அவரின் உருவ படத்தை திறந்து வைத்து பேசினார்.

நிகழ்ச்சியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்டச் செயலாளர் கே.மோகன், இச்சங்கத்தின் மாநில துணை பொது செயலாளர் கோவை செல்வராஜ், ஏஐடியூசி மாவட்டத் தலைவல் மாதேஸ்வரன், மாவட்ட பொது செயலாளல் மணி, கட்டட தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சுதர்சனன், மாவட்ட பொருளாளர் விஜயா, மாநிலக்குழு உறுப்பினர்கள் மணி, முனியம்மாள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News