தொப்பூர் அருகே லாரி மீது பஸ் மோதிய விபத்து : ஒருவர் பலி 18 பேர் காயம்

தொப்பூர் அருகே லாரி மீது பஸ் மோதிய விபத்தில் ஒருவர் பலியானார். 18 பேர் படுகாயம அடைந்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Update: 2021-10-06 05:00 GMT

தர்மபுரி அருகே தொப்பூர் கணவாயில் முன்னால் சென்ற லாரி மீது பஸ் மோதி விபத்து

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த 28 பேர் பேர் நேற்று முன்தினம் தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர்.

இவர்கள் இதற்காக டூரிஸ்ட் பஸ்சில் சென்றனர். பல இடங்களை சுற்றி பார்த்து விட்டு இறுதியாக நேற்று மாலை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் முடித்துவிட்டு இரவு பஸ்ஸில் வந்துகொண்டிருந்தனர்.

பஸ்சை வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த சலீம்  என்பவர் ஓட்டி வந்தார். மாற்று டிரைவராக அதே பகுதியைச் சேர்ந்த கோபால் என்பவரும் உடன் இருந்தார்..

இவர்கள் பஸ்ஸின் முன் பகுதியில் அமர்ந்திருந்தனர்.  இவர்களின் அருகே சுற்றுலா பயணி மேட்டுப்பாளையத்தை சேர்ந்த வரதன் மகன் வயது பரத். என்பவர் அமர்ந்திருந்தார்.

மேலும் வாணியம்பாடி அடுத்த கோணம்பட்டி குப்புசாமி மகன் சர்குணம் உள்ளிட்ட இரண்டு ஆண் குழந்தைகள் இரண்டு பெண் குழந்தைகள் என 28 பேர் சுற்றுலா சென்றிருந்தனர்.

இவர்கள் சேலம்- தர்மபுரி மெயின்ரோட்டில் அதிகாலை ஒரு மணியளவில் தொப்பூர் அடுத்த கணவாயில் வந்தபோது முன்னால் சென்ற லாரி மீது பஸ் பயங்கரமாக மோதியது.

இதில் சலீம், கோபால் சர்குணம் ,பரத் உள்ளிட்ட 15 பேர் படுகாயமடைந்தனர். உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரத் உயிரிழந்தார். மேலும் சலீம், கோபால், சர்குணம் உள்ளிட்டவர்கள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மற்றவர்கள் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இச்சம்பவம் குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News