தர்மபுரியில் மாணவியர் விடுதிக்கு சுற்றுச்சுவர்: செந்தில்குமார் எம்.பி

தர்மபுரியில் மாணவியர் விளையாட்டு விடுதிக்கு சுற்றுச்சுவர் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் செந்தில்குமார் எம்.பி. தெரிவித்தார்.

Update: 2021-09-27 04:15 GMT

தர்மபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில்,  மாணவியர் விளையாட்டு விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் மொத்தம் 60 மாணவிகள் தங்கி,  பயிற்சி பெறும் வகையில் வசதிகள் அமைந்துள்ளன. தற்போது கொரோனா காலம் என்பதால் 26 மாணவிகள் மட்டும் தங்கி பயிற்சி பெற்று வருகின்றனர். இந்த மாணவியர் விளையாட்டு விடுதிக்கு,  சுற்றுச்சுவர் இல்லாததால் பாதுகாப்பு பிரச்சனை ஏற்பட்டது.

இந்நிலையில், தர்மபுரி எம்.பி. டாக்டர் செந்தில்குமார்,  மாவட்ட விளையாட்டு மைதானத்தில் உள்ள மாணவியர் விளையாட்டு விடுதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அந்த விடுதியில் மாணவிகளுக்கு செய்து கொடுக்கப்பட்டுள்ள வசதிகள் குறித்து அதிகாரிகளுடன், அவர் கேட்டறிந்தார்.

மேலும், விடுதியை சுற்றி பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை இருப்பதை பார்த்த அவர், தர்மபுரி மாணவியர் விளையாட்டு விடுதிக்கு 65 மீட்டர் சுற்றளவுக்கு பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து சுற்றுச்சுவர் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர் பியூலா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News