உள்ளாட்சி பணியாளர் சம்மேளனத்தின் நல்லம்பள்ளி ஒன்றிய பேரவை கூட்டம்

தர்மபுரி மாவட்ட ஏஐடியூசி உள்ளாட்சி பணியாளர் சம்மேளனத்தின் நல்லம்பள்ளி ஒன்றிய பேரவை கூட்டம் நடந்தது.

Update: 2021-12-31 08:45 GMT

தர்மபுரி மாவட்ட ஏஐடியூசி உள்ளாட்சி பணியாளர் சம்மேளன நல்லம்பள்ளி ஒன்றிய பேரவை கூட்டம் நடந்தது.

தர்மபுரி மாவட்ட ஏஐடியூசி உள்ளாட்சி பணியாளர் சம்மேளனம் கிராம ஊராட்சி பணியாளர்கள் சங்கத்தின் நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய பேரவை மற்றும் ஏஐடியூசி தொழிற்சங்கத்தின் 102ம் ஆண்டு கொடி ஏற்று விழா ஜருகு மானியதஅள்ளி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு நடைபெற்றது.

கூட்டத்திற்கு தூய்மை பணியாளர் தனபால் தலைமை வகித்தார்.நிர்வாகி சண்முகம் வரவேற்றார். நிர்வாகிகள் சின்னப்பொண்ணு,முருகம்மாள் முன்னிலை வகித்தனர்.மானியதஅள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் ஜெ.ஆர்.சிவசக்தி சங்க கொடியை ஏற்றி வைத்தார். உள்ளாட்சி பணியாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் மனோகரன் கோரிக்கைககள் குறித்து விளக்கி பேசினார்.

ஏஐடியூசி மாவட்ட பொது செயலாளர் கே.மணி பேரவை கூட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட துணைத் தலைவர் ஆர்.சுதர்சனன்,பிஎஸ்என்எல் மாவட்ட அமைப்பு செயலாளர் பி.வணங்காமுடி ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். ஊராட்சிகளில் சிறப்பு காலமுறை ஊதியம்,தொகுப்பூதியம்,தினக்கூலி ஊதியம் பெறும் அனைத்து தொழிலாளர்களுக்கும் அரசு அறிவித்துள்ளபடி பொங்கல் போனஸ் வழங்க வேண்டும். கொரோனா கால சிறப்பு ஊக்க தொகை வழங்க வேண்டும்.20 ஆண்டுகளாக ரூ 250 மாத ஊதியத்தில் பணியாற்றும் கூடுதல் டேங்க் ஆப்ரேட்டர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.

தூய்மை காவலர்களுக்கு பணி பதிவேடு முறையை நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும்.ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைபடி ஊதிய உயர்வு மற்றும் நிலுவை தொகை வழங்க வேண்டும்.ஊராட்சிகளில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சுத்த செய்வதற்கு வழங்கும் தொகை வருட கணக்கில் வழங்காமல் இருப்பதை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தூய்மை காவலர்கள்,தூய்மை பணியாளர்களுக்கு பணி பாதுகாப்புஉபகரணங்கள், முககவசம்,கையுறை, காலணி, சீருடை,மருந்துகள் வழங்க வேண்டும்.பிரதி மாதம் 5-ந் தேதிக்குள் ஊதியம் வழங்க வேண்டும்.மேலும் பணியாளர்களின் வேலை நேரத்தை முறையாக மாவட்ட நிர்வாகம் அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.நிர்வாகிகள் சண்முகம், ஆண்டியப்பன், பச்சயப்பன், விஸ்வநாதன், சங்கர்,மாதேஸ்,செவத்தாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

Tags:    

Similar News