தர்மபுரி அஞ்சலக காப்பீடு திட்டங்களில் புதிய முகவர்களுக்கு நேர்காணல்

அஞ்சல் ஆயுள் காப்பீடு, கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்ட புதிய முகவர்களுக்கான தேர்வு வரும், 23ந் தேதி நடக்கிறது.

Update: 2021-07-12 02:42 GMT

இது தொடர்பாக, அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ஸ்ரீஹரி வெளியிட்டுள்ள அறிக்கை: இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தர்மபுரி அஞ்சல் கோட்டம் சார்பாக, மாவட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சலங்கள், கிராமிய அஞ்சலங்களிலும், அஞ்சல் ஆயுள் காப்பீடு, கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு வழங்கப்படுகிறது. இத்திட்டங்களில் புதிய முகவர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டத்தில் மத்திய, மாநில அரசு ஊழியர்களும், கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டத்தில் அந்தந்த கிராமங்களில் வசிக்கும் கிராம மக்கள் முகவர்களாக நியமிக்கப்பட உள்ளனர். தர்மபுரி அஞ்சல் கோட்ட அலுவலகத்தில் வரும், 23ந்தேதி காலை, 11 மணிக்கு இதற்கான நேர்முக தேர்வு நடக்கிறது.

10ம் வகுப்பு, 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற, 18 வயது முதல், 50 வயது வரை உள்ளவர்கள் நேர்முக தேர்வில் கலந்து கொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள், தங்களின் போட்டோ, வயது, கல்வி சான்றிதழ், ஆதார் ஆகியவற்றின் அசல், இரண்டு நகல் மற்றும் முழு விபரங்களுடன் கலந்து கொள்ளலாம். கூடுதல் விபரங்களுக்கு, 04342 260932 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News