அஞ்சலகங்களில் விரைவில் இண்டர்நெட் பேங்கிங் வசதி: அஞ்சல் கண்காணிப்பாளர் தகவல்

விரைவில் அஞ்சலகங்களில் இண்டர்நெட் பேங்கிங் மற்றும் மொபைல் பேங்கிங் வசதி ஏற்படுத்தப்படும் என அஞ்சல் கண்காணிப்பாளர் ஸ்ரீ ஹரி தெரிவித்துள்ளார்.

Update: 2022-02-26 05:45 GMT

பைல் படம்.

மத்திய அரசு நிதிநிலை அறிக்கையில் இந்தியாவில் உள்ள 1.5 இலட்சம் அஞ்சல் அலுவலகங்கள் இணையத்தின் வழியாக இணைக்கப்படும் என மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

இதன் மூலம் அனைத்து அஞ்சலகங்களிலும் இண்டர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் மற்றும் ஏடிஎம் வாயிலாக பணபரிவர்தனை செய்ய இயலும். வங்கி கணக்கிலிருந்து அஞ்சலக சேமிப்பு கணக்கிற்கு இணைய வழி மூலம் பணப் பரிமாற்றம் செய்து கொள்ள வசதி ஏற்படுத்தப்படும்.

இத்திட்டத்தின் மூலம் கிராம பகுதியில் வசிக்கும் விவசாயிகள் பெண்கள் மற்றும் மூத்த குடிமக்கள் பயன்பெறலாம். மத்திய அரசின் வழிகாட்டுதல் படி அருகில் உள்ள அஞ்சலகத்தில் சேமிப்பு கணக்கை துவங்கி எளிய முறையில் பண பரிவர்தனை செய்து கொள்ளலாம் என தர்மபுரி அஞ்சல் கண்காணிப்பாளர் ஸ்ரீ ஹரி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News