தருமபுாியில் பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்த திருத்தேரோட்டம்

தருமபுாியில் பங்குனி உத்திரத்தையொட்டி பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்த திருத்தேரோட்டம் நடந்தது.

Update: 2022-03-18 06:45 GMT

தருமபுரியில் பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்த தேரோட்டம்.

தருமபுாி நகரப்பகுதியில் அன்னசாகரத்தில் உள்ள புகழ்பெற்ற  விநாயகர் சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 12 ம் தேதியன்று கொடி ஏற்றத்துடன் துவங்கி 7 நாட்கள் நடைபெற்று வருகிறது.

பங்குனி உத்திர திருவிழாவின் ஒவ்வொரு நாளும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் வழிபாடுகளும் நடத்தப்பட்டன, அலங்கரிக்கப்பட்ட பல்வேறு வாகனங்களில் சாமி ஊர்வலம் நடைபெற்றது. பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து சுவாமிக்கு குடத்தில் கொண்டு வரப்பட்ட பாலை அபிஷேகம் செய்து வழிப்பட்டனர்

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் திருவிழா இன்று நடைபெற்றது . விநாயகர், சிவசுப்பிரமணிய சுவாமி எழுந்தருளிய அலங்கரிக்கப்பட்ட தேரினை ஆயிரக்கனக்கான பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்து நிலை கொண்டு வந்து சேர்த்தனர். அப்போது பக்தர்கள் முருகனுக்கு அரோகரா அரோகரா முருகா என எழுப்பிய கோஷங்கள் எழுப்பினர். பக்தர்கள் உப்பு, மிளகு, சில்லரைகாசு, பூ, பழம், நிலத்தில்விளைந்த தானியங்கள் ஆகியவற்றை தேர் மீது வீசி வழிபட்டனர். அலங்கரிக்கப்பட்ட தேரில் சிவசுப்பிரமணிய சுவாமி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தருமபுரியில் மட்டும்தான் பெண்கள் மட்டுமே வடம்பிடித்து இழுக்கும் தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெறுகிறது என்பது குறிப்பிடதக்கதாகும்.

தேர் திருவிழாவையொட்டி அனைத்து பக்தர்களுக்கும் ஆலய நிர்வாகத்தின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்களுக்கு குடிநீர்வசதியும், மாவட்ட காவல்துறை சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன

Tags:    

Similar News