சுற்றுலா பயணிகளுக்கு தடை: வெறிச்சோடிய ஒகேனக்கல்.!

சுற்றுலாப் பயணிகளை நம்பி சுமார் 5 ஆயிரம் தொழிலாளர்கள் உள்ளனர்.

Update: 2021-04-30 14:43 GMT

தமிழகத்தில் உள்ள மிக முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக, தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். அது போன்று செல்பவர்கள் எண்ணெய் மசாஜ் செய்வது, அருவியில குளிப்பது மற்றும் பரிசலில் சென்று அருவியை ரசித்து வருவார்கள்.

ஆனால் கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களை மூடுவதற்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதனை தொடர்ந்து ஒகேனக்கல் அருவிக்கு செல்லும் வழியில் போலீசார் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று ஏறுமுகமாகவே காணப்படுகிறது. இதனிடையே அதிகரித்து தொற்று காரணமாக ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நின்றுவிட்டது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் ஐந்தருவி செல்லும் நடைபாதை வெறிச்சோடி காணப்பட்டது. அதே போன்று பரிசல்கள் அனைத்தும் கவிழ்த்து வைக்கப்பட்டுள்ளது. கடைகள் அனைத்தும் மூட்பட்டிருந்தது.

சுற்றுலாப் பயணிகளை நம்பி சுமார் 5 ஆயிரம் தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களின் வாழ்வாதாரம் தற்போது கேள்விக்குறியாக மாறியுள்ளது என்று தொழிலாளர்கள் கூறியுள்ளனர்.

Tags:    

Similar News