கோட்டை கோவில் மாசிமக தேரோட்டத்தை நடந்த இந்து முன்னணி கோரிக்கை

கடந்த 10 ஆண்டுகளாக நடத்தப்படாத தர்மபுரி கோட்டை கோவில் மாசிமக தேரோட்டத்தை நடந்த வேண்டும் என கலெக்டரிடம் இந்து முன்னணி கோரிக்கை

Update: 2021-11-24 03:45 GMT

தேர் திருவிழா நடத்த வேண்டும் என கோரி கலெக்டரிடம் மனு அளிக்க வந்திருந்த இந்து முன்னணியினர்

தர்மபுரி கோட்டை பகுதியில் சோழ மன்னர்களால் கட்டப்பட்ட மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ கல்யாண காமாட்சி உடனாகிய மல்லிகார்ஜுன சாமி கோவில், வரமகாலட்சுமி உடனாகிய பரவாசுதேவ சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் மாசிமக தேரோட்டம் நடைபெறுவது வழக்கம் இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் . 

இந்நிலையில், சாலை சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களை கூறி கடந்த 10 ஆண்டுகளாக இந்து சமய அறநிலைத்துறையினர் தேர்திருவிழாவை நடத்தவில்லை. எனவே இந்தக் கோயில் தேரோட்டத்தை நடத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனதர்மபுரி மாவட்ட இந்து முன்னணி அமைப்பாளர் ராஜி தலைமையில் நிர்வாகிகள் தர்மபுரி கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்

Tags:    

Similar News