தர்மபுரி மாவட்டத்தில் போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி அளிப்பு

தர்மபுரி மாவட்டத்தில் போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட இருப்பதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Update: 2022-04-19 04:30 GMT

தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. தற்போது தர்மபுரி மாவட்ட வேலைநாடுநர்கள் பயனடையும் வகையில் (TNPSC Gr-IV 2022) தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தகுந்த பயிற்றுநர்களைக் கொண்டு 23.04.2022 முதல் வகுப்புகள் நடைபெற உள்ளது.

மேலும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் போட்டித்தேர்விற்கு தேவையான சமச்சீர்கல்வி பாடப்புத்தகம் மற்றும் புத்தகங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இப்பயிற்சி வகுப்பில் இலவசமாக பாடக்குறிப்புகள் வழங்கப்படும் மற்றும் மாதிரித்தேர்வுகள் நடத்தப்படும். இப்பயிற்சியில் சேர விருப்பம் உள்ளவர்கள் https://bit.ly/3O7BytI என்ற Google படிவத்தில் விண்ணப்பிக்கவும். மேலும் விவரங்களுக்கு தொலைபேசி எண்.04342 296188 வாயிலாக தொடர்பு கொள்ளலாம். தற்போது தமிழ்நாடு அரசுபணியாளர் தேர்வாணையம் (TNPSC Gr-IV 2022)- 7138 காலிப்பணியிடங்கள் வெளியிட்டுள்ளதால் போட்டித் தேர்விற்கு தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தகுதி வாய்ந்தவர்கள் இலவச பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன் பெறுமாறும் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News