தருமபுரி நகரில் பா.ம.க. வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

அதிமுக கூட்டணியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் தருமபுரியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Update: 2021-03-19 07:52 GMT

தருமபுரி மாவட்டத்தில் அதிமுக கூட்டணியில் பாமக தருமபுரி, பென்னாகரம் தொகுதியில் போட்டியிடுகிறது. மீதமுள்ள 3 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது.

இதில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பாலக்கோடு தொகுதியில் போட்டியிடுகிறார். அதே போன்று பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் தற்போதைய அதிமுக எம்.எல்.ஏ., ஏ.கோவிந்தசாமி போட்டியிடுகிறார். இந்நிலையில், தருமபுரி நகரில் பாமக வேட்பாளர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் காலை முதலே மக்களை சந்தித்து தனக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

அவருடன் அதிமுக நகர செயலாளர் பூக்கடை ரவி மற்றும் பாஜக, தமாகா உட்பட பல்வேறு கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் சென்றனர். செல்லும் இடங்களில் தனக்கு அமோக ஆதரவு உள்ளது என வேட்பாளர் வெங்கடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News