பாப்பிரெட்டிப்பட்டி அருகே மூதாட்டி சாவு: போலீசார் விசாரணை

பாப்பிரெட்டிப்பட்டி அருகே வீட்டில் தவறி விழுந்து சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி சாவு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Update: 2021-12-01 16:00 GMT

 தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள எலந்தகொட்டப்பட்டியை சேர்ந்தவர் காளியப்பன் இவரது மனைவி வேலாயி (வயது 80 ).இவர் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு வீட்டில் தவறி விழுந்து விட்டார். பின் மண்டையில் பலத்த காயமடைந்துள்ளது. வீட்டிலேயே நாட்டு வைத்தியம் பார்த்து உள்ளனர்.

நேற்று தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.அங்கு சிகிச்சை பெற்று வீட்டிற்கு வரும் வழியிலேயே உயிரிழந்தார்.

இது குறித்து புகாரின் பேரில் பாப்பிரெட்டிப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News