தர்மபுரி முத்தாய்ப்பாய் 3ம் நாள் புத்தக திருவிழா: இன்று கடைசி நாள்

தர்மபுரி முத்தாய்ப்பாய் 3 ஆம் நாள் புத்தக திருவிழா இன்றுடன் முடிவடைகிறது.

Update: 2021-12-26 06:00 GMT

தகடூர் புத்தகப் பேரவை சார்பில் 3ம் நாள் புத்தகத்திருவிழா.

தர்மபுரி பாரதிபுரம்  மதுராபாய் சுந்தரராஜராவ் திருமண மண்டபத்தில் 3ம் நாள் நிகழ்ச்சியாக தமிழனின் பெருமிதம் தரும் தொன்மை என்ற தலைப்பில் தொல்லியல் அறிஞர் அமர்நாத் இராமகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். முன்னதாக  இடைப்பாடி அமுதன் எழுதிய தமிழ்நாட்டில் சர் தாமஸ் மன்றோ என்ற புத்தகத்தை வெளியிட்டார்.

பின்னர் பேசிய அவர், மக்கள் வாழ்கிற பகுதியை கண்டு பிடித்து ஆய்வு செய்ய வேண்டும். தமிழகத்தில் 293 இடங்களை தேர்வு செய்து அதில் கீழடியில் ஆய்வு நடைபெற்றது. கீழடி குறித்து பரிபாடலில் இலக்கியத்தில் வைகை நதி பற்றி அதிகமாக பேசப்படுகிறது. இலக்கியச் சான்றுகள் இல்லை என தெரிவித்தவர்களின் கூற்று கீழடி ஆய்வுகள் பொய்யாக்கி உள்ளது.

கீழடி குறித்து 1976ல் ஆய்வு செய்து இருந்தால் அப்போது கீழடி குறித்த உண்மைகள் தெரிந்திருக்கும் 2015 இப்போது நமக்குத் தெரிந்தது. கீழடி கிமு 600 ஆண்டுகள் பழமையானது என தற்போது தெரியவந்துள்ளது. இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை ஆய்வு செய்யவில்லை என்றாலும் தமிழக தொல்லியல் துறை ஆய்வு செய்ய முடியும் என்ற நிலையை உருவாக்க வேண்டும்.

கீழடி முதல் ஆண்டில் 49 ஆய்வுகுழியும் இரண்டாவது ஆண்டில் ஐம்பத்தி ஒன்பது ஆய்வுக் குழிகள் அமைத்து ஆய்வுகள் நடைபெற்றது. பழங்காலத்தில் மதுரை வெளி வீதி வரை மட்டுமே இருந்துள்ளது. மதுரையில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் கீழடி தென்னை மரத் தோப்புகளில் மத்தியில் இருந்ததால் கீழடி தற்போது நமக்கு அப்படியே கிடைத்திருக்கிறது; இல்லை என்றால் அவை சிதைக்கப்பட்டிருக்கும். தொல்லியல் எச்சங்கள் சின்னங்களை காப்பாற்ற வேண்டும் தர்மபுரி மாவட்டத்தில் மூன்று வள்ளல்கள் இங்கு வாழ்ந்து இருக்கிறார்கள் இதனை குறித்து  ஆய்வு செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். 

முன்னதாக 11 தலைப்புகளில் சிறப்பு கவியரங்கம் நடைபெற்றது. இன்று ஞாயிற்றுக்கிழமை புத்தக திருவிழா கடைசி நாளாகும்.

இந்நிகழ்ச்சியில் தகடூர் புத்தக பேரவை தலைவர் சிசுபாலன், செயலாளர் மருத்துவர் செந்தில், உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News