தருமபுரி வேளாண் உதவி இயக்குனர் கொரோனாவுக்கு பலி: ஜி.கே மணி இரங்கல்

தருமபுரி மாவட்ட வேளாண் உதவி இயக்குனர் (ஜேடிஏ) அமுதவள்ளி கொரோனாவுக்கு பலியான சம்பவம் அரசு அதிகாரிகளிடம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-05-27 10:37 GMT

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட வேளாண் உதவி இயக்னராக அமுதவள்ளி பணியாற்றி வந்தார். அவர் பல ஆயிரம் விவசாயிகளுக்கு அரசு சார்பில் உள்ள உதவிகளை பெற்று கொடுத்துள்ளார். தருமபுரி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் குழு மேம்பாட்டை மேம்படுத்தியுள்ளார்.

அமுதவள்ளிக்கு ஒரு வாரத்திற்கு முன்பாக கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது; இதற்காக அவர்  சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று நள்ளிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 

வேளாண்உதவி இயக்குனர் மறைவுக்கு பாமக தலைவரும், பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினருமான ஜி.கே.மணி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பென்னாகரம் தொகுதிக்குட்பட்ட பனைகுளம் கிராமத்தைச் சேர்ந்த, தர்மபுரி மாவட்ட வேளாண் உதவி இயக்குனர் (ஜேடிஏ) அமுதவள்ளி இறப்புச் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News