எல்லாமே பொய்யி..! இந்தியன் 3 தியேட்டர்லதானாம்..!

வெறும் வாயை மென்று கொண்டிருந்தவர்களுக்கு அவல் கிடைத்தாற்போல இந்தியன் 3 குறித்த தகவல் ஒன்று கசிந்துள்ளது.

Update: 2024-10-03 09:49 GMT

அநியாயம் பண்றவங்களை இந்தியன் தாத்தா தட்டி கேப்பாரு என்கிற நிலையிலிருந்து இந்தியன் தாத்தாவை வைத்து ஃபன் பண்றோம் மோடுக்கு கொண்டு வந்துவிட்டனர் நெட்டிசன்கள். வெறும் வாயை மென்று கொண்டிருந்தவர்களுக்கு அவல் கிடைத்தாற்போல இந்தியன் 3 குறித்த தகவல் ஒன்று கசிந்துள்ளது. அதாவது வேறு வழியில்லாமல் இந்தியன் 3 படத்தை கைவிட லைகா நிறுவனம் முடிவு செய்துவிட்டதாக செய்திகள் பரவி வருகின்றன.

தமிழ் சினிமாவின் ஐகானிக் படங்களில் ஒன்று இந்தியன். எந்த அளவுக்கு அந்த திரைப்படத்துக்கு எதிர்பார்ப்பும் வரவேற்பும் நிறைந்து இருந்ததோ அதற்கு நேர்மாறாக ஆகிவிட்டது இந்தியன் 2 படத்தின் ரிசல்ட். கடுமையாக விமர்சிக்கப்பட்ட படங்களில் ஒன்றாக மாறிவிட்டது இந்தியன் 2. சின்ன சின்ன பசங்க கூட மீம் போட்டு படத்தைப் பற்றி கலாய்த்து தொங்க விட்டனர். இப்படி ஒரு விமர்சனத்தை ஷங்கர் எதிர்பார்க்கவில்லை.

இதனால் ஷங்கர், கமல்ஹாசன், லைகா என அனைவருமே அப்செட். ஆறு மாதத்திலேயே அடுத்த பாகம் ரிலீஸ் என சொல்லிவந்த நிலையில், அதனை கண்டுகொள்ளாமல், ஷங்கர் ராம்சரண் படத்துக்கும், லைகா வேட்டையன், விடாமுயற்சி படங்களுக்கும், கமல்ஹாசன் தக்லைஃப், ஏஐ டெக்னாலஜி படிப்பதற்கு அமெரிக்காவுக்கும் சென்றுவிட்டனர். இதனால் இங்கே பல புரளிகள் உருவாகி சுத்தி வருகின்றன.

நெட்பிளிக்ஸ் ஓடிடி தளமானது இந்தியன் 2 படத்தை தியேட்டர் ரிலீஸுக்கு பிறகு ஒளிபரப்ப 125 கோடி ரூபாய் கொடுத்ததாக தகவல் வெளியானது. இந்தியன் 3 படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட 250 கோடி ரூபாய் வரை எதிர்பார்ப்பதாக லைகா தரப்பில் தகவல் கிடைத்ததால் நெட்பிளிக்ஸ் இதனை குறைக்க பரிசீலித்து வருவதாக தெரிகிறது. அதற்குள் யாரோ ஒருவர் கொளுத்தி போட இந்தியன் 3 நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் ஆகிறது என கிளப்பிவிட்டனர்.

இந்தியன் 2 திரைப்படம் நன்றாக வரவேற்கப்படவில்லை என்பதால், அடுத்த பாகத்தை நம்பியே லைகா இருக்கிறது. இதனடிப்படையிலேயே படத்துக்கான லாபம் தெரியவரும். ஏனென்றால் இந்தியன் 2 படம் ஓடிடி, சாட்டிலைட் நல்ல விலைக்கு சென்றிருந்தாலும், திரையரங்கில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதனால் லைகா போட்ட கணக்கு நிறைவேறவில்லை.

இந்தியன் 3 படத்தை திரையரங்கில் வெளியிட்டால் மட்டுமே படத்துக்கு செலவு செய்த தொகையை ஈடுகட்டமுடியும். அல்லது நெட்பிளிக்ஸ் 250 கோடி ரூபாய் தர சம்மதிக்க வேண்டும். ஆனால் லைகாவை பொறுத்தவரையில் திரையரங்கில் வெளியிடவே முடிவில் இருப்பதாக கூறப்படுகிறது.

காரணம்

லாபம் பெறவேண்டும் என்றால் அதுவே வழி

நெட்பிளிக்ஸ் தரப்பில் 150 கோடி ரூபாய்க்கு தான் அதிகபட்சம் பேசப்படும்

திரையரங்குக்கான பிரம்மாண்ட படம் இது

இப்படி பல காரணங்கள் லைகா தரப்பில் இருக்கிறது. இதனால் படம் நிச்சயமாக ஓடிடியில் நேரடியாக ரிலீஸ் செய்யப்படாது. திரையரங்குகளில்தான் வெளியாகும் என்று அழுத்தமாக கூறப்படுகிறது.

தக் லைஃப் படத்துக்கு முன்பே

கமல்ஹாசன் - மணிரத்னம் இணைந்துள்ள தக்லைஃப் திரைப்படம் தள்ளிப்போவதால் இந்தியன் 3 படத்தை முன்கூட்டியே ஜனவரி மாதம் ரிலீஸ் செய்யலாமா என யோசித்து வருகின்றனர். இதனால் அடுத்த ஆண்டு இந்தியன் 3 மற்றும் தக்லைஃப் என கமல்ஹாசன் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் தான்.

Tags:    

Similar News