கார்த்தியோட கிளாஸ்மேட்டா சூப்பர்ஸ்டார்? அடடே இந்த விசயம் தெரியாம போச்சே!

கார்த்தியோட கிளாஸ்மேட்டா சூப்பர்ஸ்டார்? அடடே இந்த விசயம் தெரியாம போச்சே!

Update: 2024-10-01 04:57 GMT

கார்த்தி நடிப்பில் மெய்யழகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்துக்கான புரமோசன் பணிகளில் கார்த்தி ஈடுபட்டு வந்த சமயத்தில் அவர் சூப்பர் ஸ்டார் தனது கிளாஸ்மேட் எனவும், அவருடன் சேர்ந்து நடிக்க நல்ல ஸ்கிரிப்ட் அமைய வேண்டும் என தெலுங்கு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார். இதனால் சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் ரசிகர்களும் ஆச்சர்யமடைந்துள்ளனர்.

மகேஷ்பாபுவை விட 2 வயது குறைந்த கார்த்தி எப்படி அவருடன் படித்திருக்க முடியும் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஒருவேளை தனது அண்ணன் சூர்யாவின் கிளாஸ்மேட் என்பதைதான் தவறுதலாக இப்படி சொல்லிவிட்டாரா என பலரும் கேட்டுவருகின்றனர். இதற்கு காரணம் மகேஷ்பாபு, சூர்யா இருவருக்கும் ஒரே வயது. இருவரும் 1975ம் ஆண்டு பிறந்தவர்கள். ஆனால் இவர்களை விட 2 வயது குறைந்த கார்த்தி எப்படி கிளாஸ்மேட் ஆவார் என்கிற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது.

இவர்கள் மூவருமே செயின்ட் பேட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் படித்திருக்கிறார்கள். இது சென்னையில் அமைந்துள்ள பிரபல பள்ளியாகும். இங்கு பல திரை பிரபலங்களும், வசதியான வீட்டு பிள்ளைகளும் படித்திருக்கிறார்கள். அதனால் ஸ்கூல்மேட் என்று சொல்வதற்கு பதிலாக கார்த்தி கிளாஸ்மேட் என்று சொல்லியிருக்கலாம் என்கின்றனர் சிலர்.

இந்த பள்ளியில் இவர்கள் மட்டும் படிக்கவில்லை. தி கோட் பட இயக்குநர் வெங்கட் பிரபுவும், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுமே இந்த பள்ளியில் படித்தவர்கள்தான்.

கார்த்தியும் மகேஷ்பாபுவும் ஒரு படத்தில் இணைய இருப்பதாக கூறப்பட்டது. அந்த வாய்ப்பு கொஞ்சம் மிஸ் ஆகியிருப்பதாக கூறப்படுகிறது. மகேஷ்பாபுவின் 29வது படத்தில் அவர் நடிக்க வேண்டியதாக இருந்தது. அவரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. விரைவில் நல்ல ஸ்க்ரிப்ட் அமைந்தால் இணைந்து நடிப்போம் என்றிருக்கிறார் கார்த்தி.

கார்த்தி நடிப்பில் தற்போது மெய்யழகன் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அடுத்ததாக சர்தார் 2, கைதி 2, தீரன் 2 என வரிசையாக பல படங்களைக் கைவசம் வைத்திருக்கிறார் கார்த்தி.

மகேஷ்பாபு ராஜமவுலி இயக்கத்தில் மிகப்பெரிய படத்தில் நடிக்க காத்திருக்கிறார். விரைவில் இந்த படம் நிறைவடைந்து திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News