தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரியில் சலுகைகள் வழக்கக்கோரி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-08-27 10:00 GMT

உள்ளிருப்பு போராட்டத்தில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள்.

தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றும் 270 தூய்மை பணியாளர்கள் இன்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 2013ம் ஆண்டு முதல் பணியாற்றும் இந்த ஊழியர்களுக்கு சம்பள உயர்வும் வழங்க படவில்லை.

மேலும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கிடைக்க வேண்டிய எந்த ஒரு சலுகையும் வழங்கவில்லை. அதேபோல கொரோனா காலத்தில் பணியாற்றிய இந்த ஊழியர்களுக்கு தமிழக அரசு அறிவித்த ரூ.5000 ஊக்கத்தொகையும் வழங்கபடவில்லை.

கடந்த 2018ம் ஆண்டு முதல் வேறு ஒரு நிறுவனம் மூலம் மருத்துவ கல்லூரியில் தூய்மை பணிக்கு ஒப்பந்தம் செய்து, ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு எந்தவித சலுகைகளும் இதுவரை வழங்கப்படவில்லை.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்கு பலமுறை கோரிக்கை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் இன்று தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் பரபப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News