தர்மபுரி மாவட்டத்தில் பெண் வாக்காளர்களே அதிகம் வாக்களிப்பு

தர்மபுரி மாவட்டத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெண் வாக்காளர்களே அதிகம் வாக்களித்துள்ளனர்.

Update: 2022-02-20 05:15 GMT

பைல் படம்.

தர்மபுரி நகராட்சி மற்றும் 10 டவுன் பஞ்சாயத்துகளில் நேற்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகமானோர் வாக்களித்துள்ளனர்.

தர்மபுரி நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன இதில் ஆண் வாக்காளர்கள் 19364, பெண் வாக்காளர்கள் 20337 இதர வாக்காளர்கள் 2 மொத்தமாக 39703 பேர் வாக்களித்துள்ளனர். 

அரூர் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. ஆண் வாக்காளர்கள் 7999, பெண் வாக்காளர்கள் 8797, மொத்தமாக 16796 பேர் வாக்களித்துள்ளனர்.

கடத்தூர் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன ஆண் வாக்காளர்கள் 3956, பெண் வாக்காளர்கள் 4064, இதர வாக்காளர்கள் 1 மொத்தமாக 8021 பேர் வாக்களித்துள்ளனர். 

பி.மல்லாபுரம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன ஆண் வாக்காளர்கள் 4362, பெண் வாக்காளர்கள் 4516, மொத்தமாக 8878 பேர் வாக்களித்துள்ளனர். 

பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. ஆண் வாக்காளர்கள் 3139, பெண் வாக்காளர்கள் 3331, மொத்தமாக 6470 பேர் வாக்களித்துள்ளனர். 

கம்பைநல்லூர் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. ஆண் வாக்காளர்கள் 4456, பெண் வாக்காளர்கள் 4322, மொத்தமாக 8778 பேர் வாக்களித்துள்ளனர்.

காரிமங்கலம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. ஆண் வாக்காளர்கள் 4855, பெண் வாக்காளர்கள் 5165, மொத்தமாக 10020 பேர் வாக்களித்துள்ளனர். 

மாரண்டஅள்ளி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. ஆண் வாக்காளர்கள் 4050, பெண் வாக்காளர்கள் 4315, மொத்தமாக 8365 பேர் வாக்களித்துள்ளனர்.

பாப்பாரப்பட்டி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன, ஆண் வாக்காளர்கள் 4451, பெண்வாக்காளர்கள் 4630 மொத்தமாக 9081 பேர் வாக்களித்துள்ளனர். 

பாலக்கோடு பேரூராட்சியில் 16 வார்டுகள் உள்ளன. ஆண் வாக்காளர்கள் 6363, பெண் வாக்காளர்கள் 6597, மொத்தமாக 12960 பேர் வாக்களித்துள்ளனர்.

பென்னாகரம் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. ஆண் வாக்காளர்கள் 6097, பெண் வாக்காளர்கள் 6107,  மொத்தமாக 12204 பேர் வாக்களித்துள்ளனர். 

மொத்தமாக தர்மபுரி மாவட்டத்தில் ஆண் வாக்காளர்கள் 69092, பெண் வாக்காளர்கள் 72181, இதர வாக்காளர்கள் 3 பேர் என மொத்தமாக 141276 பேர் வாக்களித்துள்ளனர். 

ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் வாக்களித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News