சாலையில் பள்ளம்! கவனிக்குமா தருமபுரி நிர்வாகம்?

தருமபுரி நகர பாரத ஸ்டேட் வங்கி எதிரில் உள்ள சாலையில் ஒரு பள்ளம் ஏற்பட்டுள்ளது. அதனால் விபத்துகள் ஏற்படலாம்

Update: 2021-04-10 09:30 GMT

தர்மபுரியில் விபத்து ஏற்படுத்த காத்திருக்கும் பள்ளம்.

தருமபுரி நகரில் வாகனங்கள் எப்போதும் பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் காட்சிகளை பார்க்க முடியும். மருத்துவமனை, வங்கிகள், திரையரங்கம் மற்றும் கடைகளுக்காக அக்கம்பக்க கிராமங்களில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் தருமபுரி நகரத்திற்கு வருகை புரிவார்கள்.

தருமபுரி நகர பாரத ஸ்டேட் வங்கி எதிரில் உள்ள சாலையில் உள்ள பாதாள சாக்கடைக்காக போடப்பட்ட இரும்பு கம்பிக்கு அருகில்  ஏற்பட்டுள்ள ஒரு பள்ளத்தால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் செல்லும்போது விபத்துக்கள் நிகழ வாய்ப்புள்ளது.

எனவே, விபத்து நடக்கும் முன்னர் சம்பந்தபட்ட அரசு அதிகாரிகள் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை மூட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Tags:    

Similar News