நில அபகரிப்பு செய்த போலீசார் மீது நடவடிக்கை கோரி எஸ்.பியிடம் புகார்

நில அபகரிப்பு செய்து கொலை மிரட்டல் விடும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி தர்மபுரி எஸ்.பி.யிடம் பெண் புகார் அளித்தார்.

Update: 2021-08-07 09:00 GMT

தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அவர் அளித்த புகார் மனுவில் தெரிவித்துள்ளதாவது:

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த அஜ்ஜனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் அலமேலு வயது 50. இவர் உடன் பிறந்தவர்கள் மூன்று ஆண்கள், ஐந்து பெண்கள் ஆவார்கள். இவர் மாற்றுத்திறனாளி, கணவனால் கைவிடப்பட்டவர் ஆவார். என்னுடைய பெற்றோர்களின் பூர்வீகமாக 40 ஏக்கர் விவசாய நிலம் இருந்தது. இதில் என் தாய் தந்தையர் பெயரில் சுமார் 5 ஏக்கர் ஜீவனாம்சமாக விவசாய நிலம் இருந்தது. இதில் 90 சென்ட் நிலத்தை மட்டும் 2008ஆம் ஆண்டு எனக்கு தானமாக செட்டில்மென்ட் செய்து வைத்தனர். என்னுடைய தாயாரின் இறப்புக்குப் பின்பு நிலத்தினை கேட்டதற்கு தான செட்டில்மெண்ட் பத்திரத்தை கொடுத்தனர்.

அதனை மாற்ற கிராம நிர்வாக அலுவலரை அணுகியபோது பத்திரப்பதிவு முறைப்படி நடக்கவில்லை. அதனை சரிசெய்து வர அறிவுறுத்தினர் .இதனை என்னுடைய சகோதரர் பெண்ணாகரம் போலீஸ் ஸ்டேஷனில் உளவுப் பிரிவில் பணியாற்றி வரும் சென்றாய பெருமாள் அவர்கள் தர மறுத்துவிட்டார். யாருக்கும் தெரியாமல் 3 ஏக்கர் நிலத்தினை, காவல்துறையில் பணிபுரிவதால் தன்னுடைய அதிகார பலத்தை பயன்படுத்தி என்னுடைய தாயார் அழைத்துச் சென்று அவருடைய பெயருக்கு மாற்றியது தெரியவந்தது.

இதனை அவரிடம் கேட்கும்போது என்னுடைய சகோதரர் போலீஸ் சென்றாயப்பெருமாள் எங்களை மிரட்டி வருகிறார். இது மட்டுமல்லாமல் தரக்குறைவாக மற்றும் தகாத வார்த்தையால் என்னையும் என் மகனையும் பேசி குடியிருக்க விடமாட்டேன் என்று மிரட்டி வருகிறார். தரக்குறைவாக பேசி கொலை மிரட்டல் விடுக்கிறார். ஆகவே அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் எங்கள் உயிருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கொடுத்த மனுவில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News