தர்மபுரியில் பிஎஸ்என்எல் தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

தர்மபுரியில், 4ஜி சேவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பிஎஸ்என்எல் தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2021-06-25 14:31 GMT

தர்மபுரியில்,  4ஜி சேவையை வலியுறுத்தி, பிஎஸ்என்எல் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரியில் 4ஜி சேவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் தொழிற்சங்கங்கள் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பிஎஸ்என்எல் அதிகாரிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் அ.ராமசுந்தரம் தலைமை வகித்தார்.எஸ்என்இஏ சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.பாலமுரளி,ரேவதி,சங்கீதா முன்னிலை வகித்தார். எஸ்என்இஏ மாநில செயலாளர் கிஷோர்குமார்,என்எப்டிஇ மாவட்டச் செயலாளர் கே.மணி, டிஇபியூ மாவட்டச் செயலாளர் அம்மாசி, மாநில நிர்வாகி தங்கராஜ் ஆகியோர்  உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில், பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு மே மாத ஊதியத்தை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; மாதாமாதம் முறையாக ஊதியம் வழங்க வேண்டும்; வாடிக்கையாளர்களுக்கு 4 ஜி சேவையை தொடங்க வேண்டும். எப்டிடிஎச் இணைப்பு சேவை சரண்டவர் ஆவதை நிர்வாகம் தடுக்க வேண்டும்; 3-வது ஊதிய சம்பளக்குழு பரிந்துரையை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இறுதியில் நிர்வாகி பரிமளாபானு நன்றி கூறினார்.

Tags:    

Similar News